காசா பகுதியில் மனித அவலம் – பஞ்சத்தால் குழந்தை உயிரிழப்பு

வடக்கு காசா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இரண்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல் ஷிஃபா மருத்துவமனையில் மஹ்மூத் பாத்து என்ற குழந்தை உயிரிழந்ததாக பலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவமனையில் குழந்தை படுக்கையில் மூச்சு விட முயற்சிக்கும் வீடியோ மூலம் இந்த சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை
குழந்தை இறப்புகள் அதிகரிக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்த சில நாட்களில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.

காசா பகுதியில் கடுமையான உணவு தட்டுப்பாடு நிலவுவதாகவும், காசா பகுதியில் உள்ள ஜபலியா அகதிகள் முகாமில் போதிய உணவு கிடைக்காததால் பட்டினியில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற வழியில்லை என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

தங்களுடைய 4-5 வயது குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்வதையும், பசியுடன் எழுந்திருப்பதையும் தாங்க முடியவில்லை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *