சீனா பொருளாதாரத்திற்கு வேட்டு.. சீட்டுக்கட்டு போல் சரியும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்..?!!

சீன பொருளாதாரத்தில் உள்கட்டமைப்பு, குடியிருப்புகள் தேவை பெரும் பங்கு வகிக்கும் காரணத்தால், அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறை சீன பொருளாதாரத்தில் சுமார் 20 சதவீத பங்கீட்டைக் கொண்டு உள்ளது.
நிதிகளை வளைத்துத் தண்ணீர் பிரச்சனைகளைக் குறைப்பது முதல் காடு, மலை, பணி பிரதேசத்தில் சாலை அமைப்பது வரையில் அந்நாட்டின் உள்கட்டமைப்புத் துறை பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதைத் தொடர்ந்து சீனாவின் மிகப்பெரிய மக்கள் தொகைக்குப் போதுமான வீட்டு வசதிகளை ஏற்படுத்தித் தருவது மிகவும் சவாலான விஷயம், அதேநேரத்தில் இதில் பெரும் வர்த்தக வாய்ப்புகள் உள்ளது. இதை அனைத்தையும் நம்பி தான் சீன அரசும், சீன வங்கிகளும் அதிகப்படியான கடன்களையும், நிதி உதவிகளையும் அந்நாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்தது. இதன் விளைவு தலைக்கு மேல் கடன்களை வைத்துக்கொண்டு கடன்களைச் செலுத்த முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது பல சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்.
சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே குரூப் சுமார் 300 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடன்களை வாங்கியிருக்கும் வேளையில், இதைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் கிட்டதட்ட 3 வருட அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் ஹாங்காங் நீதிமன்றம் இந்நிறுவனத்தை மூட உத்தரவிட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் கடன் பிரச்சனை குறித்த வழக்கில் ஹாங்காங் நீதிபதி லிண்டா சான் இன்று கொடுத்த தீர்ப்பில், எவர்கிராண்டே பல மாதங்களாகத் தனது மறுசீரமைப்புத் திட்டத்திற்குத் தீர்வு காண முயற்சி செய்து வருகிறது, ஆனால் எவ்விதமான பலனும் இல்லை. enough is enough எனக் கூறிவிட்டு நிறுவனத்தை மூட உத்தரவிட்டார்.
இந்த நிலையில் எவர்கிராண்டே நிறுவனத்திடம் இருக்கும் 240 பில்லியன் டாலர் சொத்துக்களையும் விற்பனை செய்யவும், இந்நிறுவனத்திற்குத் தீர்வு காணவும் liquidator அமைக்கும் பணிகளைத் தொடர வேண்டும் என அறிவித்துள்ளார். எவர்கிராண்டே நிறுவனம் 2021 முதல் அதீத கடன் பிரச்சனை காரணமாகத் தவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து எவர்கிராண்டே நிறுவனத்தைப் போலவே Country Garden என்ற மற்றொரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமும் தனது கடனை திருப்பிச் செலுத்துவதில் தடுமாறி வருகிறது.
ஆனால் கடந்த மாதம் யுவான் மதிப்பிலான பத்திரங்களைத் திருப்பிச் செலுத்தும் எனத் தெரிவித்துள்ளது. பொதுவாகப் பெரிய நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்தால் அதைச் சார்ந்துள்ள கிளை நிறுவனங்கள், சப்ளையர்கள், கடன் கொடுத்தவர்கள், கடைநிலை ஊழியர்கள் வரையிலான பாதிப்பு பெரிய அளவில் இருக்கும். இந்த நிலையில் எவர்கிராண்டே, Country Garden ஆகியவற்றின் வீழ்ச்சி சீனாவின் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட், நிதி சேவை, கட்டுமான பொருட்கள் சப்ளையர்கள் பெரும் வீழ்ச்சியை அடைய உள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *