புது அவதாரத்தில் களமிறங்கிய வேட்டைக்காரன்! விலை இவ்ளோதானா! ராயல் என்பீல்டு ஷோரூம்களுக்கு படையெடுக்கும் மக்கள்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350). கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான், ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
குறைவான விலை (Price) உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் பெற்றுள்ளது. இதன் காரணமாக 2 லட்சம் யூனிட்கள் என்ற விற்பனை மைல்கல்லை (Sales Milestone), கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதமே ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் கடந்து விட்டது.
அதாவது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ஆண்டு முடிவதற்கு முன்பாகவே ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் இந்த பிரம்மாண்டமான விற்பனை மைல்கல்லை கடந்து, அனைவரையும் பிரம்மிக்க வைத்தது. இந்த சூழலில் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் 2 புதிய கலர் ஆப்ஷன்கள் (Colour Options) தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டேப்பர் ஓ (Dapper O), டேப்பர் ஜி (Dapper G) என்ற பெயர்களில் இந்த புதிய கலர் ஆப்ஷன்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், Dapper O என்பது ஆரஞ்ச் (Orange) நிறத்தையும், Dapper G என்பது பச்சை (Green) நிறத்தையும் குறிக்கிறது. இந்த 2 புதிய கலர் ஆப்ஷன்களின் விலையும் 1.70 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
புதிய கலர் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை தவிர, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. செயல்திறனை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில், 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் பல்வேறு வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன.
புதிய டேப்பர் ஓ மற்றும் டேப்பர் ஜி கலர் ஆப்ஷன்கள் தவிர, டேப்பர் க்ரே, டேப்பர் ஒயிட், ஃபேக்டரி பிளாக், ரீபெல் பிளாக், ரீபெல் ப்ளூ மற்றும் ரீபெல் ரெட் ஆகிய கலர் ஆப்ஷன்களிலும், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.