மிரட்டும் பைக்குடன் வருகிறது Husqvarna Motorcycles.. Svartpilen 901 இன்று வெளியாகுமா? – விலை என்னவாக இருக்கும்?
ஆஸ்திரேலியா நாட்டை தலைமையகமாக கொண்டு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக உலக அளவில் தங்கள் பைக்கை விற்பனை செய்துவரும் நிறுவனம் தான் Husqvarna Motorcycles.
இந்நிலையில் நாளை 5ம் தேதி, ஐரோப்பாவில் அதன் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக வரவிருக்கும் Svartpilen 901ன் மற்றொரு டீசரை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இந்த வண்டி நாளை அறிமுகமாக அதிக வாய்ப்புகள் இருந்தாலும் இந்திய சந்தையில் இது எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இன்னும் இந்த வாகனத்தின் முழுமையான உருவ அமைப்பை அந்நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும் பல்வேறு தகவல்கள் இந்த பைக் குறித்து தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றது. Svartpilen 901 ஆனது 889cc, பேரலல்-ட்வின் மோட்டாரைப் பயன்படுத்தும், இது Husqvarna Norden 901 மற்றும் KTM 890 Duke R ஆகியவற்றில் உள்ள அதே அளவு தான்.
இந்த இன்ஜின் 9,250rpmல் 121bhp ஆற்றலையும், 7,70.80 இல் 99Nm Rpm இல் 99Nm வரையும் வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது ஆறு-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில் ஒரு உதவி மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் நிலையானதாக இருக்கும். Svartpilen 901ல் உள்ள சக்கரங்கள் ரப்பருடன் 17-இன்ச் அலாய்களாக வருகின்றது. உலகளாவிய சந்தைகளில், Husqvarna Svartpilen 901, Yamaha XSR 900, Kawasaki Z900RS, Ducati Scrambler மற்றும் KTM 890 Duke R ஆகியவற்றுக்கு எதிராக இது சந்தையில் போட்டியிடும்.
இந்திய சந்தையில் Husqvarna Vitpilen 250, Husqvarna Svartpilen 250 மற்றும் Husqvarna Svartpilen 401 ஆகிய மூன்று வண்டிகள் தற்போது விற்பனையில் உள்ளது. ஐரோப்பிய வெளியீட்டுக்கு பிறகு இந்திய சந்தையில் இந்த புதிய Svartpilen 901 வெளியாகும்போது சுமார் 3.5 லட்சம் என்ற விலையில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.