Hyderabadi Fish Biryani: நாவூறும் சுவையில் ஹைதராபாத் மீன் பிரியாணி
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி. பிரியாணி பிடிக்காத ஒருவரை கூட பார்ப்பது அரிதான விஷயம்.
காலை, மதியம், இரவு என மூன்று நேரம் பிரியாணி கொடுத்தாலும் நம்மில் பலர் சலிக்காமல் சாப்பிடுவோம்.
அந்தவகையில், வித்யாசமான சுவையில், சுவையான ஹைதராபாத் மீன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் வறுப்பதற்கு
மீன்- 6 துண்டு
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
மல்லி தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
கரம் மசாலா- ½ ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
குழம்பு மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
எலுமிச்சை- ½
பிரியாணி செய்வதற்கு
பாசுமதி அரிசி- 1 கப்
எண்ணெய்- தேவையான அளவு
பட்டை- 1 துண்டு
கிராம்பு- 4
ஏலக்காய்- 2
பிரியாணி இலை- 1
வெங்காயம்- 2
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
புதினா- 1 கைப்பிடி
கொத்தமல்லி- 1 ஸ்பூன்
பச்சைமிளகாய்- 2
எலுமிச்சை- ½
தயிர்- 1 ஸ்பூன்
தக்காளி- 1
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலா- ½ ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், கரம் மசாலா, குழம்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து கலந்து வைத்துள்ள மசாலா கலவையில் சுத்தம் செய்து வைத்துள்ள மீன் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து மீனை 50% வேகும்வரை பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து பொரிந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி பின் கொத்தமல்லி புதினா, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் இதில் தக்காளி சேர்த்து வதக்கி அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் 1½ கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் ஊறவைத்த பாசுமதி அரிசி சேர்த்து 90% வெந்து வந்ததும் அதில் பொரித்த மீன் சேர்க்கவும்.
பின் இதனை கலந்து மேலே புதினா இல்லை தூவி 10 நிமிடம் மூடி தம் போட்டு இறக்கினால் சுவையான ஹைதராபாத் மீன் பிரியாணி தயார்.