ஹூண்டாய் கிரெட்டாவா? கிரெட்டா N லைனா? எது சிறந்தது? ஓர் ஒப்பீடு இதோ

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சமீபத்தில் கிரெட்டா-N லைன் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது ஸ்டாண்டர்டு கிரெட்டா மாடலின் செயல்திறன் மிக்க வெர்ஷனாகும். கிரெட்டா-N லைன் அறிமுகமாவதற்கு முன்பு ஏற்கனவே i20 N லைன் மற்றும் வீனுயூ N லைன் கார்களை ஹுண்டாய் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1.5 லிட்டர் MPi பெட்ரோல் (115PS பவர் மற்றும் 144Nm இழுவிசை), 1.5 லிட்டர் கப்பா டர்போ GDi பெட்ரோல் (160PS பவர் மற்றும் 253Nm இழுவிசை) மற்றும் 1.5 லிட்டர் U2 CRDi டீசல் (116PS பவர் மற்றும் 250Nm இழுவிசை) என மூன்று இஞ்சின் ஆப்ஷனில் ஹூண்டாய் கிரெட்டா வருகிறது. இதில் 1.5 லிட்டர் MPi பெட்ரோல் இஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் IVT ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸைக் கொண்டுள்ளது. அதேபோல் 1.5 லிட்டர் கப்பா டர்போ GDi பெட்ரோல் இஞ்சின் 7-ஸ்பீடு DCT ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே உள்ளது. 1.5 லிட்டர் U2 CRDi டீசல் இஞ்சினில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸைக் கொண்டுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டாவின் மைலேஜ் விவரங்கள் இதோ:

1.5 லிட்டர் MPi பெட்ரோல் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் – ஒரு லிட்டருக்கு 17.4கி.மீ

1.5 லிட்டர் MPi பெட்ரோல் IVT ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் – ஒரு லிட்டருக்கு 17.7கி.மீ

1.5 லிட்டர் கப்பா டர்போ GDi பெட்ரோல் 7-ஸ்பீடு DCT ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் – ஒரு லிட்டருக்கு 18.4.கி.மீ

1.5 லிட்டர் U2 CRDi டீசல் 6-ஸ்பீடு மேனுவல் – ஒரு லிட்டருக்கு 21.8கி.மீ

1.5 லிட்டர் U2 CRDi டீசல் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் – ஒரு லிட்டருக்கு 19.1கி.மீ

ஹூண்டாய் கிரெட்டா N லைன் காரில் 1.5 லிட்டர் கப்பா டர்போ GDi பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 160PS பவரையும் 253 Nm இழுவிசையும் கொண்டுள்ளது. எனினும் ஸ்டாண்டர்டு ஹூண்டாய் கிரெட்டா போல் அல்லாமல், கிரெட்டா N லைனில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா N லைன் காரின் மைலேஜ் விவரங்கள்:

1.5 லிட்டர் கப்பா டர்போ GDi பெட்ரோல் 6-ஸ்பீடு மேனுவல் – ஒரு லிட்டருக்கு 18கி.மீ

1.5 லிட்டர் கப்பா டர்போ GDi பெட்ரோல் 7-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் – ஒரு லிட்டருக்கு 18.2கி.மீ

மைலேஜைப் பொறுத்தவரை ஸ்டாண்டர்டு கிரெட்டாவிற்கும் கிரெட்டா N லைனிற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. சொல்லப்போனால் ஸ்டாண்டர்டு கிரெட்டா காரின் மைலேஜ் 0.2kmpl அதிகமாகவே இருக்கிறது.

இந்த இரண்டு கார்களின் விலையை நாம் ஒப்பிடும் போது, மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா N லைன் காரில் சக்திவாய்ந்த இஞ்சினோடு பல வசதிகளும் கூடுதலாக உள்ளது. ஸ்டாண்டர்டு கிரெட்டாவின் விலை ரூ.11 லட்சத்தில் தொடங்கி ரூ.20.15 லட்சம் வரை உள்ளது. அதுவே ஹூண்டாய் கிரெட்டா N லைன் காரின் விலை ரூ.16.82 லட்சத்தில் தொடங்கி ரூ.20.45 லட்சம் வரையில் உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *