ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் காரின் சோதனை ஓட்ட படங்கள்
இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற எஸ்யூவிகளில் ஒன்றான க்ரெட்டா எலக்ட்ரிக் மாடலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வரும் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடலாம்.
க்ரெட்டா இவி காரில் 45 kWh மற்றும் 60 kWh பேட்டரி பேக் என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்ற மாடல் 400 கிமீ முதல் 600 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம்.
இந்திய சந்தையில் க்ரெட்டா என்-லைன் மற்றும் க்ரெட்டா என இரு மாடல்களும் விற்பனையில் கிடைக்கின்ற நிலையில் புதிதாக வரவுள்ள க்ரெட்டா இவி காரின் தோற்ற அமைப்பில் ஒரே மாதிரியான எல்இடி ரன்னிங் விளக்குடன் ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்களை பெற்றாலும் மாறுபட்ட முன்பக்க கிரில் மற்றும் பம்பர் பெற்றதாக அமைந்திருக்கலாம்.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற டாடா நெக்ஸான்.ev, மஹிந்திரா XUV400, எம்ஜி ZS EV, வரவுள்ள மாருதி சுசூகி eVX ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா EV விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.