ஹூண்டாய் கிரெட்டா N-line விலை மற்றும் சிறப்புகள்

ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அடிப்படையில் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்ற N-line மாடலில் N8 மற்றும் N10 என இரண்டு வேரியண்டுகளை பெற்று 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டதாக வந்துள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் எஞ்சின் விபரம்
கிரெட்டாவில் உள்ள சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆனது 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.9 விணாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது.

அதிகபட்சமாக 160 PS பவர், 253 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற உள்ளது.

6 வேக மேனுவல் கிரெட்டாவின் என்-லைன் மைலேஜ் 18Kmpl
7 வேக DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மைலேஜ் 18.2Kmpl
பாதுகாப்பு வசதிகள்

ஹூண்டாய் CRETA N லைன் மேம்பட்ட கனெக்ட்டிவிட்டி மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 360 டிகிரி கோணத்தில் சுற்றுப்புற பாதுகாப்பை வழங்குகின்றது.

என்-லைனில் 6 ஏர் பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் (HAC) மற்றும் லெவல் 2 ADAS என ஒட்டுமொத்தமாக 70 க்கும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உட்பட 42 அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களுடன் வந்துள்ளது.

கிரெட்டா Vs கிரெட்டா என்-லைன் வித்தியாசங்கள்
என்-லைன் மாடலுக்கும் விற்பனையில் உள்ள சாதரண மாடலுக்கும் வித்தியாசத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இரண்டு மாடல்களுக்கு முன்பக்க தோற்ற அமைப்பில் கிரில் மாற்றியமைக்கப்பட்டு ஸ்கிட் பிளேட்டில் சிறிய மாற்றங்களுடன் ஹூண்டாய் லோகோ மற்றும் N-line பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.

பக்கவாட்டில் புதிய N பேட்ஜ் பெற்ற 18 அங்குல அலாய் வீல் மட்டும் பெற்று பாடி பேனல்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை. டிஸ்க் பிரேக் இரு டயர்களில் கொண்டிருக்கின்ற நிலையில் சிவப்பு நிற காலிப்பரை என்-லைன் பெற்றுள்ளது. ஆனால் சாதரன மாடலில் 17 அங்குல வீல் , காலிப்பர் வழக்கமானதாக உள்ளது.

தொடர்ந்து படிக்க
டீலருக்கு வந்த ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் காரின் படங்கள்
ஹூண்டாய் கிரெட்டாவின் N-line பற்றி முக்கிய தகவல்கள்
பின்புற தோற்றத்தில் புதிய ஸ்கிட் பிளேட் பகுதியில் சிவப்பு நிற லைன் கொடுக்கப்பட்டு என்-லைன் பேட்ஜிங் உள்ளது. மற்றபடி, டெயில் லைட்டுகள் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன.

இன்டிரியரில் முழுமையாக கருமை நிறத்தை பெற்று பல்வேறு இடங்களில் சிவப்பு நிற இன்ஷர்ட்டுகள் மற்றும் என்-லைன் பேட்ஜ் பெற்றதாக உள்ளது.

கிரெட்டா என்-லைன் போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் கிடைக்கின்ற கியா செல்டோஸ் X-line உட்பட ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், மஹிந்திரா எக்ஸ்யூவி700, மற்றும் டாடா சஃபாரி உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

Hyundai Creta N-line on-road price
ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ரூ.21.11 லட்சம் முதல் ரூ.25.74 லட்சம் வரை அமைந்துள்ளது.

Creta N-line விலை (எக்ஸ்-ஷோரூம்) ஆன்-ரோடு விலை
N8 6 MT ₹ 16,82,300 ₹ 21,10,453
N8 7DCT ₹ 18,32,300 ₹ 23,02,561
N10 6MT ₹ 19,34,300 ₹ 24,10,454
N10 7DCT ₹ 20,29,900 ₹ 25,73,654
(All price Tamil Nadu)

கருப்பு, அட்லஸ் வெள்ளை, டைட்டன் கிரே மேட் ஆகிய ஒற்றை நிறங்களுடன் டூயல் டோன் விருப்பங்களில் மேற்கூறை கருமை நிறத்தை பெற்ற அட்லஸ் வெள்ளை, கிரே, மற்றும் ப்ளூ என மொத்தமாக 6 நிறங்களை பெற்றிருக்கின்றது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *