நம்பவே முடியாத சம்பவத்தை செய்த ஹூண்டாய்… டாடாக்கு இந்நேரம் மூக்கு மேல வேர்த்து கொட்டியிருக்கும்…
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய் (Hyundai). இந்த நிறுவனத்தின் கடந்த ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாக 67,615 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 8.5 சதவீத வளர்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 57,115 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 14 சதவீதம் அதிகம் ஆகும். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது.
இதுதான் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும். இதற்கு முன்பாக ஹூண்டாய் நிறுவனம் வேறு எந்த ஒரு மாதத்திலும் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்தது கிடையாது. இது மிகப்பெரிய சாதனை என்பதில் சந்தேகமில்லை.
மறுபக்கம் ஹூண்டாய் நிறுவனத்தின் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் இருந்து 10,500 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 13.7 சதவீதம் வீழ்ச்சி ஆகும்.
ஏற்றுமதி சரிவடைந்தாலும் கூட, உள்நாட்டில் கார் விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் சாதனையை படைத்திருப்பது இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது ஹூண்டாய் வெனியூ, ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் ஹூண்டாய் ஐ20 போன்ற கார்கள்தான் இந்த சாதனைக்கு மிகவும் முக்கியமான காரணங்களாக உள்ளன.