ரூ7000 கோடியை முதலீடு செய்யும் ஹூண்டாய்! எங்க பண்ண போறாங்க தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது ஆலையை அமைப்பதற்காக ரூபாய் 7000 கோடியை முதலீடு செய்யப் போவதாக தற்போது அறிவித்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள தனது ஆலையில் இந்த முதலீட்டை கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து சிறந்த கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. மாருதிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் தான் அதிகமான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இந்நிறுவனம் தமிழகத்தில் தான் இரண்டு ஆலைகளை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வருகிறது.
சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இந்நிறுவனத்தின் ஆலையை நிறுவப்பட்டு அங்கு ஹுண்டாய் நிறுவனத்தின் காரணங்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில். முற்றிலும் தனியாக இயங்கும் இரண்டாவது ஆலையை அமைக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஹூண்டாயின் நிறுவனம் ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ஆலையை தற்போது கைப்பற்றியுள்ளது.
அந்த ஆலையில் தற்போது ஹூண்டாய் நிறுவனம் ரூபாய் 7000 கோடியை முதலீடு செய்து இரண்டாவது தயாரிப்பு ஆலையாக அந்த ஆலையை உருவாக்க முடிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் என்ற பகுதியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்டினவிஸ் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் டேலிகோன் என்ற பகுதியில் தான் ஜென்ரல் மோட்டார்ஸ் நடத்தி வரும் ஆலை அமைந்துள்ளது. தற்போது அந்த ஆலையை கைப்பற்றி தான் ஹூண்டாய் நிறுவனம் அதை தனக்கான ஆலையாக மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. இந்த ஆலையை கடந்த ஆண்டு தான் ஹூண்டாய் நிறுவனம் என்றால் மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து வாங்கியது.
ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தனது தொழிலை நிறுத்திவிட்டு முற்றிலுமாக இந்தியாவில் இருந்து வெளியேறியது. அப்பொழுது தனது தயாரிப்பு ஆலையை பராமரிப்பை மட்டும் செய்து வந்த நிலையில் தற்போது இந்த ஆலையை ஹூண்டாய் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அலை மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமையப்போகும் நிலையில் அங்குதான் இனி ஹூண்டா நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளுக்கான பிளாட்ஃபார்ம்களை எல்லாம் கட்டமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஹூண்டாய் நிறுவனம் தயாரித்து வரும் அனைத்து கார்களுக்கான பிளாட்ஃபார்ம் சென்னையில் தான் இருக்கிறது. இந்த பிளாட்ஃபார்ம் அப்படியே இருக்கும். இந்த பிளாட்பார்மில் தயாராகும் கார்கள் எல்லாம் சென்னையில் தான் தயாராகும்.
ஆனால் ஹுண்டாய் நிறுவனம் அடுத்தடுத்து புதிதாக கொண்டு வரப் போகும் பிளாட்ஃபார்ம் எல்லாம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆலையில் கட்டமைக்கப்பட்ட அங்குதான் வாகனங்கள் இனி தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னையில் உள்ள ஆலையில் ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ஹூண்டாய் நிறுவனத்தால் தயாரிக்க முடியும் என்ற அளவிற்கு தனது ஆலையை கட்டமைத்துள்ளது.
புதிய ஆலை அமையும் பட்சத்தில் இன்னும் ஹூண்டாய் நிறுவனத்தின் கொள்ளளவு என்பது அதிகமாகும் வருங்காலங்களில் எலக்ட்ரிக் கார்களின் வருகை அதிகமாக இருப்பதால் கொண்டாய் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் பிளாட்ஃபார்ம்களை மொத்தமாக மகாராஷ்டிராவிற்கு மாற்றவும் வாய்ப்பு உள்ளது. தற்போது ஹூண்டாய் நிறுவனத்தின் சிறிய கார்கள் முதல் அதன் எலெக்டரிக் கார்கள் வரை அனைத்தும் தமிழகத்தில் தான் தயாராகிறது.