“நான் புத்திசாலி.. நான் ஏன் இந்திய அணிக்கு கேப்டனாக கூடாது” – பும்ரா தரமான கேள்வி

டி20 உலகக் கோப்பைத் தொடர் அடுத்து நடக்க இருக்கின்ற காரணத்தினால் ரோகித் சர்மா அதற்கு கேப்டனாக செயல்படப் போவது உறுதியாக தெரிகிறது.
மேலும் அவர் 2023-2025 ஆண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தொடர்ந்து இருப்பார் என்றும் நம்பலாம்.
ஆனால் இதற்குப் பிறகு இந்த வடிவங்களுக்கு புதிய கேப்டனை கண்டறிய வேண்டிய தேவை இருக்கிறது. மிகக் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திற்கு, சூழ்நிலைகளைப் புரிந்த மனம் தளராத கேப்டன் தேவை.
இந்த வகையில் 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று ஒரு டெஸ்ட் விளையாட வேண்டி இருந்தபொழுது ரோகித் சர்மா கோவிட்டால் பாதிக்கப்பட்டார், அப்பொழுது பும்ரா இந்திய அணியை வழி நடத்தினார். அவர் இந்திய அனுப்பி கேப்டனாக இருக்க விரும்புவது வெளிப்படையானது.
மேலும் தற்பொழுது ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் கேப்டனாக அந்த அணிக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவங்களில் உலகக் கோப்பையை வென்றிருக்கிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பும்ரா “நான் ஒரு டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தேன், அது மிகப்பெரிய கௌரவம். அந்த போட்டியில் நாங்கள் தோற்றம் ஆனாலும் முன்னணியில் இருந்தோம். நான் பொறுப்பை விரும்புகிறேன். நான் ஒவ்வொரு முடிவுகள் எடுப்பதில் ஈடுபடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டிருக்கிறேன்.