சயின்ஸ் புக்கில் என்ன இருக்குனு தெரியாது.. உருவக் கேலி செய்ய வந்துட்ட.. பும்ரா மனைவி சஞ்சனா பதிலடி!

மும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் உருவக் கேலி செய்த ரசிகர் ஒருவருக்கு கொடுத்துள்ள பதிலடி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளரும் மாடலுமான சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழரான சஞ்சனா கணேசனை திருமணம் செய்ததன் மூலமாக பும்ரா தமிழ்நாட்டு மருமகனான மாறினார்.
2021ஆம் ஆண்டு கோவாவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பும்ரா – சஞ்சனா கணேசன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பின் குழந்தையுடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் பும்ரா அவ்வப்போது வெளியிட்டு வந்தார். ஆனால் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அதிகளவில் பதிவிடவில்லை. இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு விளம்பர வீடியோ ஒன்றை பும்ரா – சஞ்சனா கணேசன் ஜோடி இணைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது.
அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவுக்கு கீழ், அண்ணியின் உடல் கொஞ்சம் குண்டாக உள்ளது என்று உருவக் கேலி செய்தார்.