“விராட் கோலி இப்படி பண்றது எனக்கு பிடிக்கல.. அவர் ரோகித் இல்லை” – ஸ்ரீகாந்த் பேட்டி
ஆனால் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகச் சிறப்பாக விளையாடியிருந்த காரணத்தினால், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் இவர்களை டி20 உலகக்கோப்பை இந்திய அணி திட்டத்தில் இருந்து விலக்க முடியவில்லை.
எனவே இவர்கள் இருவரையும் டி20 உலக கோப்பையை மனதில் வைத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு மீண்டும் இந்திய அணியில்சேர்த்து அறிவிக்கப்பட்டது.
ரோகித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்து, மூன்றாவது போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இரண்டு போட்டிகளில் விளையாடிய விராட் கோலி அதிரடியாக விளையாடும் புதிய பாணியை பின்பற்றினார். ஒருமுறை 16 பந்துகளில் 29 ரன்கள் கிடைத்தது. ஆனால் இரண்டாவது முறை ரன் ஏதும் இல்லாமல் விராட் கோலி வெளியேற வேண்டியதாக இருந்தது.
இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “ஒவ்வொருவருக்கும் அவரவர் விளையாடும் ஆட்டம் என்று இயல்பான ஆட்டம் ஒன்று இருக்கும். அந்த விளையாட்டைதான் அவரவர் பின்பற்ற வேண்டும். ஜெய்ஸ்வாலை மெதுவாக ஆரம்பிக்க சொல்லி கூற முடியாது. அவர்களுடைய பாணி எடுத்ததும் அடிப்பதுதான்.
ரோகித் சர்மா இதைச் செய்வதில் வல்லவர்.ஆனால் விராட் கோலி தன்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும். அவர் தனக்கு நேரத்தை ஒதுக்கி விளையாடுவார், சிக்ஸர் அடிப்பதை பற்றி கவலைப்பட மாட்டார். அவர் இறுதியில் வேகமாக விளையாட ஆரம்பித்து சிக்ஸர்கள் அடிப்பார். மெல்போன் மைதானத்தில் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி செய்ததை நாம் பார்ப்போம்.