கேப்டன் விஜயகாந்தின் கடைசி படம் என்னுடைய முதல் படமாகும் என நினைக்கவில்லை.. இயக்குனரின் கவலை!

Vijayakanth: தமிழ் சினிமாவில் எக்கசக்கமாக படங்களில் நடித்திருந்தாலும் விஜயகாந்தின் கடைசி படம் தமிழன் என்று சொல் தான். விருதாச்சலம் படத்துக்கு ஐந்து வருடம் கழித்து அந்த படத்தில் நடித்தாராம். ஆனால் இன்னமும் படம் ரிலீஸுக்கு தயாராகவில்லை.

தற்போது அந்த படத்தின் இயக்குனர் பொன் ஷங்கர் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. இந்த படம் தமிழின் பெருமையை தான் சொல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அவர் தான் என் கதையின் நாயகன் என்பது நான் எப்போதோ முடிவு செய்த விஷயம்.

அவரிடம் கதை சொன்ன போது பிடித்தே ஓகே செய்தார். ஷூட்டிங்கில் வந்தும் அடிக்கடி அவர் சந்தேகத்தினை கேட்பார். நாம ஒரு விஷயம் சொல்றோம். அது தப்பா போயிடக்கூடாது என்பது அவருக்கு முதல் கடமையாக இருந்தது. அவருடைய காட்சிகள் பெருமளவில் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு நாட்கள் எடுத்து புரோமோஷனுக்கு பயன்படுத்தலாம் என்று நினைத்தோம்.

ஆனால் அப்போது சின்னதாக தொடங்கிய ஒரு பிரச்னை தயாரிப்பு தரப்பு பெரிதாக்கி விட்டனர். இன்னமும் ட்ரை செய்து கொண்டு தான் இருக்கோம். பிரேமலதா மேடம் எங்களை வேறு கம்பெனிக்கு இன்னும் அனுப்பி வைத்து கொண்டு தான் இருக்கார். அடிக்கடி படம் குறித்து கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

சண்முக பாண்டியன் காட்சிகள் கொஞ்சம் இருக்கு. கண்டிப்பாக படம் வெளிவரும். அவருடைய கடைசி படம் அது தான். இது என்னுடைய முதல் படம் என்பது ஒரு பக்கம் கவலையையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது. அவரை இயக்க போகும் போது எனக்கு ரொம்பவே பயம் இருந்தது.

ஆனால் பிரேமலதா மேம் தான் தைரியம் கொடுத்தார். முதல் காட்சி பூஜையில் எடுத்தோம். படப்பிடிப்பு தளத்தில் முதல் காட்சி முடிந்ததும் என்னை அழைத்து அவர் கேட்டார். உனக்கு ஓகேவா இல்லை ரீ டேக் போகலாமா எனக் கேட்டார். அப்போதே என்னுடைய பயம் பறந்து விட்டது. ஒரு கட்டத்தில் நான் சொன்னதை அப்படியே செய்தார் எனவும் ஆச்சரிய தகவல்களை வெளியிட்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *