எனக்கு வேண்டாம்..விஜயிற்கு பண்ணு… நோ நோ அண்ணனுக்கு செய்யுங்க… சிலர்க்க வைக்கும் விஜய்-விஜயகாந்த் பாசம்..!
தமிழ் சினிமாவில் இன்று விஜய் பெரிய நட்சத்திரமாக இருக்க முக்கிய காரணம் அவர் தந்தை என்றால் இன்னொரு பெரிய காரணமாக பார்க்கப்படுபவர் விஜயகாந்த் தான். செந்தூரப்பாண்டி படத்தில் தன் தம்பி என அறிமுகம் செய்து வைத்தார்.
கடைசி வரை விஜயை குறிப்பிடும் போது தம்பி என்றும், விஜயகாந்தை விஜய் அண்ணன் என்றும் குறிப்பிட்டு கொண்டே இருந்தனர். இருவருக்கு இடையில் அத்தனை நெருங்கிய பாசம் இருக்கும். விஜயகாந்தின் இறப்புக்கு நேற்று நள்ளிரவில் வந்த விஜய் அவரை பார்த்து கண் கலங்கி நின்றார்.
கிளம்பும் போது நின்று அவரை பார்த்த காட்சியை பலருக்கு சோகத்தை தான் கொடுத்தது. அப்படி இருவரும் நிஜ வாழ்க்கையில் கூட ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமலே இருந்து வந்தனராம். அப்படி ஒரு உண்மை சம்பவத்தை ஜாக்குவார் தங்கம் தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
அந்த பேட்டியில் இருந்து, நான் ஒரு ஜிம் திறக்க இருந்தேன். அதற்கு ஒரு பெரிய நடிகரை கேட்டு இருந்தேன். அவர் இந்தோ அந்தோ எனக் கூறி 3 மாதம் இழுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் அவரின் மேனேஜர் நடிகர் வரமாட்டார் என்ற உண்மையை கூறினார். இதில் கடுப்பான நான் நேராக விஜயகாந்துக்கு கால் செய்தேன்.
பிலிம்சிட்டியில் இருப்பதாக கூற அவரை பார்க்க நேரில் சென்றேன். ஜிம் திறப்பதாக இருக்கேன். நீங்க தான் திறந்து வைக்கணும். இதுக்கா நேரில் வந்த என்றார். கேட்கணும்ல எனக் கேட்டேன். உன் தேதியை சொல்லு நான் வந்துவிடுவதாக கூறினார். விஜயையும் கூப்பிடுவதாக சொன்னேன்.
தம்பி தானே கூப்பிடு என்றார். ஆனா போஸ்டர் எனக்கு இருக்க கூடாது. விஜயுக்கு நிறைய அடிக்கணும் என்றார். இப்போ விஜயுக்கு போன் செய்தேன். நேரில் பார்க்கணும் என்றேன். அவர் மகாபலிபுர ஷூட்டிங்கில் இருக்கேன் எனக் கூற அவரை நேரில் பார்த்தேன். இப்படி ஜிம் திறக்க இருக்கேன். நீங்க வரணும் எனக் கேட்டேன்.
நான் வரா என்றார். விஜயகாந்த் சாரை அழைச்சிருக்கேன் என்றேன். சரி அப்போ அண்ணனுக்கு நிறைய போஸ்டர் அடிங்க என்றார். அவர் உங்களுக்கு, நீங்க அவருக்கு. அப்போ ரெண்டு பேரும் வர ஐடியா இல்லையா எனக் கேட்க கண்டிப்பா வருவேன். ஆனா எனக்கு போஸ்டர் வேண்டாம். இதையடுத்து நிகழ்ச்சி அன்று காலை முதல் ஆளாக விஜய் வந்து நின்றார். அதைப்போல விஜயகாந்தும் வந்து விட்டார். அவர்கள் என் மேல் வந்த பாசமும் என்னை நெகிழ வைத்ததும் என்பதை குறிப்பிட்டார்.