எனக்கு காய்ச்சல்.. இன்னைக்கு நடிக்கமாட்டேன்!. எஸ்கேப் ஆன மன்சூர் அலிகானை மடக்கிய கேப்டன்…

விஜயகாந்தின் மேனேஜர் ராஜேந்திரன் கேப்டனுடனான தனது அனுபங்களைப் பகிர்ந்து கொள்கிறார். என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

கேப்டன் விஜயகாந்த் ஒரு குழந்தை மாதிரி தான். அவர் கோபப்படுவதாக சொல்வார்கள். ஆனால் நாகரிகமாகத் தான் கோபப்படுவார். அதில் ஒரு நியாயம் இருக்கும். அடுத்த நிமிஷமே அதை மறந்து அவர்களிடம் சகஜமாகப் பழகி விடுவார். எதையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார்.

ராவுத்தர், விஜயகாந்த் ரெண்டு பேருமே எனக்கு அண்ணன் தான். இரண்டு பேரும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்டு வந்தாலே களையா இருக்கும். அவங்க ஏன் பிரிஞ்சாங்கன்னே தெரியல. ஆஸ்பிட்டல்ல இப்ராஹிம் அண்ணன் உடம்பு சரியில்லாம இருக்கும்போது கேப்டனை பார்க்கணும் பார்க்கணும்னு சொன்னாரு.

ஆனா அந்த டைம்ல பார்க்கல. அவங்களுக்குள்ள என்ன சண்டை, என்ன பிரச்சனைன்னு தெரியல. அப்போ அவரு ஆஸ்பத்திரிக்குப் போயி பார்த்திருந்தாருன்னா நட்பா இருந்துருக்கலாம்.

கேப்டன் அரசியலுக்கு வந்தபிறகு தான் அரசியல், வீடு, சினிமான்னு நிறைய பஞ்சாயத்துகள், எல்லாவற்றையும் தாண்டி அரசியலில் எதிர்க்கட்சியாக வந்ததும் அவரை விட்டு எல்லா எம்எல்ஏ.க்களும் வெளியே போனதும் அவர் மனதளவில் உடைந்து போனார்.

கேப்டன் தேர்தலில் ஜெயித்ததும் சால்வை போடப் போனேன். அப்போது ‘யார்றா நீ?’ன்னு கேட்டார். எனக்கு ஒரே அதிர்ச்சி. ‘ஏன்டா இது 300 ரூபாயா?…. நீ என் தம்பி, ஏன்டா இப்படி செலவு பண்றே?’ இது தேவையா? அப்படி திட்டினாரு. அதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவருக்கு மாலையோ, சால்வையோ போட மாட்டேன்.

தாயகம் என்ற படத்தில் மேக் அப் போடுறதுக்கே 3 மணி நேரம் ஆச்சு. படத்துல மன்சூர் அலிகானோட முகத்தையே மாத்திருப்பாங்க. அதனால காலைல 3 மணிக்கே எழுப்பி விடுவாங்க. டெய்லி இப்படியே எழுப்பும்போது அவருக்கு கோபம் வந்து டென்ஷன் ஆகிட்டாரு. ஒருநாள் எனக்கு ஜூரம் வர்ற மாதிரி இருக்குன்னு எழுந்து போயிட்டாரு.

உடனே கேப்டன் ‘அவனை விட்டுறாத. பொய் சொல்றான். நீயும் அவன் கூடவே போயிடு’ன்னு சொன்னாரு. அப்புறம் கேப்டனே கூப்பிட்டு ‘வேணாம். ஒழுங்கா படத்தைப் பாரு… 2 ஹெலிகாப்டர் வெயிட்டிங், பைட்டர்ஸ் இருக்காங்க. ஜூனியர் ஆர்டிஸ்ட் இருக்காங்க. இவ்ளோ ஆளுங்க இருக்காங்க. ஒழுங்கா நடி’ன்னு சொன்னாரு. அப்புறம் மன்சூர் அலிகான் நார்மலுக்கு வந்துட்டாரு’ என ராஜேந்திரன் கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *