எனது மகனின் திருமணம் குறித்து எனக்கு இரண்டே ஆசைகள் தான் – நீடா அம்பானி

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் திருமணத்திற்கு ரிலையன்ஸ் பவுன்டேசன் நிறுவன தலைவர் நீட்டா அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று (01.03.2024) முதல் வரும் மார்ச் 3 ஆம் தேதி வரை இவர்களது ப்ரீ வெட்டிங் நடைபெற உள்ளது. இதன் காராணமாக குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 ஏக்கர் பரப்பளவில் காடு, புனரமைக்கப்பட்ட சாலைகள், சுமார் 2,500 உணவு வகைகள் என கோலகாலமாக நடைபெற்று வருகிறது.

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சென்டின் திருமணத்தில் பங்கேற்க ஷாருக்கான், சல்மான் கான், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று, நேற்று இரவு முதலே பிரபலங்கள் ஜாம் நகரில் குவியத் தொடங்கியுள்ளனர்.

அதன்படி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க், பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங், திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் குடும்பத்தினர், போனி கபூர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வருகை புரிந்துள்ளனர்.

இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு அவரது தாய், நீட்டா அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார். எனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை பொறுத்தவரை எனக்கு இரண்டு ஆசைகள் மட்டுமே உள்ளன. “முதலாவது நமது பாரம்பரியத்தை கொண்டாட வேண்டும், மற்றொன்று நமது கலை மற்றும் பண்பாட்டிற்கு மரியாதை செலுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *