உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்! புதிய ஜனாதிபதிக்கு ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து
பின்லாந்தின் ஜனாதிபதியாக வெற்றி பெற்ற அலெக்சாண்டர் ஸ்டப்பிற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பின்லாந்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மத்திய வலதுசாரி தேசிய கூட்டணிக் கட்சியின் அலெக்சாண்டர் ஸ்டப் வெற்றி பெற்றார்.
ஐரோப்பிய சார்பு மற்றும் உக்ரைனின் வலுவான ஆதரவாளரான ஸ்டப், ரஷ்யாவை நோக்கி கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இவர் 2014யில் இருந்து 2015ஆம் ஆண்டுவரை பின்லாந்தின் பிரதமராக பணியாற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நேற்றைய தேர்தல் முடிவுகளின் மூலம் வெற்றி பெற்ற அலெக்சாண்டர் ஸ்டப்பிற்கு (Alexander Stubb) வாழ்த்துக்கள். கனடாவும், பின்லாந்தும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், உக்ரைனுக்கு ஆதரவளிப்பதற்கும், நேட்டோ நட்பு நாடுகளுடன் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் உறுதிபூண்டுள்ளன. அதையும் பலவற்றையும் செய்ய உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்’ என தெரிவித்துள்ளார்.