7.75% வரை வட்டியை உயர்த்திய ஐ.டி.பி.ஐ வங்கி: செக் பண்ணுங்க!

Fixed Deposits | ஐ.டி.பி.ஐ வங்கி தனது டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தி உள்ளது. இந்தப் புதிய விகிதங்கள் பிப்ரவரி 15, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

புதிய வட்டி விகிதத்தின்படி, ஐ.டி.பி.ஐ வங்கியானது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 7 நாள்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 3% முதல் 7% வரை வட்டி விகிதங்களையும், மூத்தக் குடிமக்களுக்கு 3.5% முதல் 7.5% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.

மேலும், இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான திரும்ப பெறக் கூடிய டெபாசிட் திட்டங்களுக்கு கொடுக்கப்படுகின்றன.

வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்

ஐ.டி.பி.ஐ வங்கி 5 ஆண்டுகள் வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 6.5 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7 சதவீதமும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்

சாதாரண டெபாசிட் திட்டங்களை பொறுத்தவரை ஐ.டி.பி.ஐ வங்கி, 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 7 சதவீதம் வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.50 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 4.8 சதவீதம் முதல் 5.30 சதவீதம் வரை வட்டி கிடைக்கின்றது.
அதேபோல், 61-90 நாள்கள் முதலீடுக்கு 4.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரையும், 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 6.8 சதவீதம் முதல் 7.3 சதவீதம் வரை வட்டியும் வழங்கப்படுகிறது.

ஐடிபிஐ வங்கி முன்கூட்டியே மூடப்பட்ட டெபாசிட்டுகளுக்கு பொருந்தக்கூடிய விகிதத்தில் 1% அபராதம் விதிக்கும். இத்தகைய மூடல்களில் ஸ்வீப்-இன்கள் மற்றும் பகுதியளவு திரும்பப் பெறுதல்கள் ஆகியவை அடங்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *