என்னுடன் இருந்த போட்டோஸை லீக் பண்ணுவேன்.. மிரட்டிய காதலன்.. பினாயிலை குடித்து மாடியில் இருந்து குதித்த காதலி..!!

சென்னை பெரம்பூர் பாரதி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி (18). அவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், அவர் தனது தாயால் வளர்க்கப்பட்டார். தனியார் மகளிர் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கொளத்தூர் ஜிகேஎம் காலனியை சேர்ந்த விக்கி (22) என்பவரை கிருஷ்ணகுமாரி காதலித்து வந்துள்ளார்.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடு காரணமாக விக்கியுடன் பேசுவதையும் சந்திப்பதையும் மாணவி முற்றிலுமாக தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்கி, இருவரும் நெருக்கமாக இருந்த போது எடுத்த புகைப்படங்களை காட்டி சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த கல்லூரி மாணவி கிருஷ்ணகுமாரி கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்த பினாயலை எடுத்து குடித்துவிட்டு வீட்டின் 2வது மாடியில் இருந்து குதித்தார். தலை மற்றும் முகம் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, உடனடியாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியிடம் அல்லிகுளம் 11வது நீதிமன்ற நீதிபதி லட்சுமி நேரில் சென்று மரண வாக்குமூலம் பெற்றார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ண குமாரி என்ற மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *