ICC : இதுக்கு பேர் என்ன தெரியுமா.. இந்தியாவுக்கு ஒரு நியாயம்.. தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு நியாயமா?

மும்பை: கேப் டவுன் பிட்ச் விவகாரத்தில் ஆட்ட நடுவர் கிறிஸ் பிராட் சார்பாக ஐசிசி-க்கு அளித்த சான்றிதழ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வெறும் ஒன்றரை நாட்கள் கூட முழுமையாக நடக்காமல் முடிவுக்கு வந்தது. மொத்தமாக 10 நாட்கள் நடக்க வேண்டிய டெஸ்ட் தொடர், 4.5 நாட்களில் முடிவடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வரலாற்று சிறப்புமிக்க மைதானமான கேப் டவுன் மைதானத்தின் பிட்ச் குறித்து விவாதங்கள் எழுந்தது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர் பிட்ச் குறித்து பேசுகையில், நாங்கள் எந்த பிட்சையும் குறை சொல்ல போவதில்லை. ஆனால் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் 3 நாட்களில் முடிவடையும் போது யாரும் வாயை திறக்காமல் இருக்க இதேபோல் இருக்க வேண்டும் என்று ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் நடுவர் கிறிஸ் பிராட், கேப் டவுன் பிட்ச் குறித்து ரேட்டிங்கை ஐசிசியிடம் சமர்ப்பித்துள்ளார். அதில் கேப் டவுன் பிட்சிற்கு திருப்தியில்லை என்று சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. கேப் டவுன் போட்டியின் போது பேட்ஸ்மேன்கள் பலரும் சீரற்ற பவுன்ஸ் காரணமாக விக்கெட்டை இழந்ததாகவும் சான்றிதழியில் கூறப்பட்டுள்ளது. இதனால் கேப் டவுன் மைதானத்திற்கு ஒரு நெகட்டிவ் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

கிறிஸ் பிராட் அளித்துள்ள ரேட்டிங் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி நடுவரான கிறிஸ் பிராட் தான், 2023ஆம் ஆண்டு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியிலும் நடுவராக இருந்தார். அந்த போட்டி 3 நாட்கள் நடைபெற்ற நிலையில், 9 பேட்ஸ்மேன்களின் எளிதாக 20 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்தனர். ஆனால் இந்தூர் பிட்ச்-க்கு கிறிஸ் பிராட், மோசமான பிட்ச் என்று ரேட்டிங் அளித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *