ஆண் குழந்தைகளுக்கு ‘இதை’ கற்பித்தால் வருங்காலத்தில் பாலியல் தொல்லைகளே இருக்காது!
பாலியல் குற்றங்களுக்கு பாலினம் ஒரு பாகுபாடாக இருப்பதில்லை. பெரும்பாலான பெண்கள், தாங்கள் பாலியல் சீண்ட்கல்களுக்கும் வன்புணர்வுகளுக்கு ஆளக்கப்பட்டதாக கூறும் நிலையில், சில ஆண்களுமே தாங்கள் சிறு வயதில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளக்கப்பட்டதாக கூறி அதிர்ச்சியளிக்கின்றனர். சமீபத்தில் புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞர் ஒருவர் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இதனால், பெண் குழந்தை வைத்திருப்பவர்கள், இனி பெற்றோர் ஆக இருப்பவர்கள் என அனைவரும், “நம் குழந்தையை எப்படி இந்த உலகில் பத்திரமாக வளர்ப்பது?” என பதறி வருகின்றனர். பாலியல் சீண்டல் செய்பவர்களும், சிறு வயதில் அல்லது தங்களது வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் பாலியல் வன்புனர்விற்கு ஆளக்கப்பட்டிருப்பார்கள் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் இவ்வளவு பெரிய குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க, ஆண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர், சில விஷயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். அவை என்னென்ன தெரியுமா?
நாளிதழையும், செய்தி சேனல்களையும் வைத்தாலே கண்டிப்பாக குழந்தைகளுக்கான பாலியல் சீண்டல் செய்திகள் குறித்த செய்திகள் கண்ணில் பட்டுவிடுகின்றன. இதை பார்க்கும் இளம் பெற்றோர்களுக்கு, நம் குழந்தையை எப்படி பாதுகாப்பாக வளர்பது என்ற பயம் ஏற்படுகிறது. வருங்காலத்திலாவது இதெல்லாம் மாறுமா? என்ற ஏக்கமும் அனைவர் மத்தியிலும் உள்ளது. இப்போதே, ஆண் குழந்தைகளுக்கு சில விஷயங்களை கற்றுக்கொடுத்தால் வருங்காலத்தில் பாலியல் குற்றங்கள் நிகழாமல் தவிர்க்கலாம். அவை என்னென்ன தெரியுமா?
ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் கற்றுக்கொடுக்க வேண்டும்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கலாம். இதற்கு காரணம், 18 வயது ஆவதற்குள்ளாக 4ல் 1 பெண் பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்படுகிறார். அதுவே ஆண்கள் மத்தியில், 13 பேரில் ஒருவர் பாலியல் குற்றத்தினால் பாதிக்கப்படுகிறார். இதில், இந்த குற்றங்களை செய்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாக இருக்கின்றனர். இதனாலேயே, ஆண் குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த அறிவை நன்றாக புகட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்போது இதை சொல்லித்தர வேண்டும்? ஆண் குழந்தைகள் 5 வயது அல்லது அதற்கும் கீழ் வயதுள்ளவர்களுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த கல்வியை பயிற்றுவிப்பது நல்லது. அவர்களுக்கு பிறரிடம் எப்படி அன்பாகவும் உதவி புரிபவராகவும் இருக்க வேண்டும் என்று செயல்கள் மூலம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
சமத்துவ பாலின விதிமுறைகளை கற்பிக்கவும்: பாலின விதிமுறைகள் குறித்த கல்வியை அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இது, பாலியல் குற்றங்களை தவிர்ப்பதற்கு மிகவும் முக்கியமான பயிற்றுவித்தல் ஆகும். ஆணுக்கு பெண் சமம் என்பதையும், அனைத்து விஷயங்களும் அனைத்து வாய்ப்புகளும் இருவருக்கும் பொதுவானது என்பதையும் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். இது ஆண்களுக்குரியது, இது பெண்களுக்குரியது என்ற பாகுபாடை காட்டாமல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
அனுமதி குறித்த அறிவு: 5 ல் இருந்து 12 வயதிற்குள் குழந்தைகளுக்கு Consent என்றால் என்ன என சொல்லிக்கொடுக்க வேண்டும். ஒருவரை தொடுவதற்கு அல்லது அவர்களிடம் ஏதாவது கேட்பதற்கு முன்னர் அதற்கு அவர்களுக்கு சம்மதமா என்பதை கேட்க வேண்டும் என அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். அதே போல, சிறு வயதில் இருந்தே அவர்களை யாரேனும் தொட வேண்டும் என்றாலும் அனுமதி கேட்க வேண்டும் என்பதை பயிற்றுவியுங்கள்.
ஆபாச படங்கள் குறித்த விழிப்புணர்வு: தற்போதுள்ள டிஜிட்டல் சாதனங்களின் எழுச்சியால் மிக சிறு வயதிலேயே பல ஆண் குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பதற்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இது குறித்த அறிவை தகுந்த வயதில் அவர்களுக்கு புகட்டுவது மிகவும் முக்கியமாகும்.
அவர்களை பேச வைக்க வேண்டும்: எந்த கற்றல் முறையிலுமே, ஒருவர் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் அது பல சமயங்களில் எதிரில் இருப்பவர்களுக்கு புரியாமல் போய்விடும். எனவே பாலியல் கல்வி குறித்து பயிற்றுவிக்கும் போது, அவர்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் அதை தீர்க்க வேண்டும். அவர்கள் பாலியல் கல்வி குறித்து பேசும் போது ‘இல்லை இல்லை, அப்படியெல்லாம் பேசக்கூடாது’ என்று கூறாமல், அதற்கு பின்னால் உள்ள அர்த்தத்தை விளங்க வைக்க வேண்டும்.