இவர் ஏலத்துக்கு வந்தால் 42 கோடி ரூபாய் வாங்குவார்.. இந்திய வீரர்களுக்கு மட்டும் ஒரு நியாயமா?- சோப்ரா
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்கள் அதிக விலைக்கு செல்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றம் சாட்டி இருக்கிறார் ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் போது முதலாவதாக தக்க வைக்கப்படும் வீரருக்கு பதினாறு கோடி ரூபாயும்,
இரண்டாவதாக தக்க வைக்கப்படும் வீரருக்கு 12 கோடி ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.அந்த வகையில் ஆர் சி பி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு 16 கோடி ரூபாயும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் 12 கோடி சம்பளம் கிடைக்கிறது. ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஏலத்தில் கிடைக்கக்கூடிய தொகையாக இது கருதப்பட்டது.
ஆனால் தற்போது நடைபெறும் ஏலத்தில் எல்லாம் சாதாரண வீரர் கூட 17 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்கள். இந்த நிலையில் ஸ்டார் வீரர்கள் தாங்கள் ஏலம் மூலம் மீண்டும் அணிக்கு வருகிறோம் என்று முடிவு எடுத்தால் அவர்கள் இதைவிட பல மடங்கு ஏலத்தில் பெறுவார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா , ஸ்டார்க் 14 போட்டிகளிலும் நான்கு ஓவர்கள் வீசினால் ஒரு பந்துக்கு 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுவார்.
இது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் யார்? ஐபிஎல் இல் சிறந்த பவுலர் யார்? அவருடைய பெயர் பும்ரா. ஆனால் பும்ரா வெறும் 12 கோடி தான் சம்பளமாக பெறுகிறார். ஆனால் ஸ்டார்க் 25 கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. இது நிச்சயம் தவறு. நான் மற்றவர்கள் வாங்கும் பணத்தை நினைத்து பொறாமை படவில்லை.
அனைவருக்குமே பணம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் இது சரியா இது இந்தியன் பிரீமியர் லீக். ஆனால் இங்கு இந்தியர்களுக்கு குறைவான சம்பளமும் வெளிநாட்டினருக்கு அதிக சம்பளமும் கிடைக்கிறது. விசுவாசம் என்பது மிகவும் இங்கு முக்கியம். நாளை மும்பை அணியிடம் என்னை விடுவித்து விடுங்கள். நான் ஏலத்தில் என்னுடைய பெயரை தரப்போகிறேன் என்று பும்ரா மும்பை அணியிடமோ இல்லை ஆர் சி பி அணியிடம் விராட் கோலி சொன்னால் அவருடைய விலை எந்த அளவுக்கு உயரும்.
அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கும் தானே? இந்திய மார்க்கெட்டில் ஸ்டார்க்கின் விலை 25 கோடி என்றால் நாளை கோலி மட்டும் ஏலத்தில் வந்தால் 42 கோடி வரை செல்வார். இதேபோல் பும்ரா குறைந்தது 35 கோடி ரூபாய் வரை செல்வார். ஆனால் இது நடக்கவில்லை. அப்படி என்றால் தவறு இருக்க தானே செய்கிறது என்று அர்த்தம்.இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது.வெளிநாட்டு வீரர்களுக்கு சம்பளத்தில் உச்ச வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒவ்வொரு அணியும் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம் என்று வைத்து கொண்டால் 150 அல்லது 175 கோடி ரூபாய் வரை இந்திய வீரர்கள் தான் வழங்க வேண்டும். எஞ்சிய தொகையை வைத்துக் கொண்டு வெளிநாட்டு வீரர்களுக்கு வழங்கலாம். சன்ரைசர்ஸ் அணி பேட் கம்மின்ஸ்க்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்திருக்கிறது என்றால் அவரை கேப்டனாக தான் மாற்றப் போகிறது. அப்படி இல்லை என்றால் அது முட்டாள்தனமான முடிவாக இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.