பிக் பாஸ் பட்டத்தை இவர் வென்றால் எனக்கு மகிழ்ச்சி – மனம் திறந்த விசித்ரா.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது ஏழாவது சீசனும் மக்கள் மத்தியில் வெற்றிகரமாக வரவேற்பு பெற்றுள்ளது.

 

இந்த சீசனில் மக்கள் மத்தியில் கடினமான போட்டியாளராக இருந்து வந்தவர் விசித்ரா. இவர் 95 நாட்களுக்கும் மேலாக வீட்டில் இருந்து தற்போது வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவு பெறுவதால், இறுதிக்கட்ட பரபரப்பு பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. பிக் பாஸில் இருந்து வெளியே வந்ததும் விசித்ராவுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களது உற்சாக வரவேற்பையும் அளித்தனர்.

 

 

 

 

இதனிடையே விசித்ரா மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு இதுவரை வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி. இத்தனை நாட்களாக நான் வீட்டிற்குள் இருப்பேன் என நினைக்கவில்லை.

பிக் பாஸில் இருந்து வெளியே வந்தது என்னுடன் இருந்தவர்களுக்கு வருத்தத்தை தந்தது. ஆனால் நான் மக்களின் மனதில் இருக்கிறேன். இதனை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் மாயா பிக் பாஸ் பட்டத்தை வென்றால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *