மாரி செல்வராஜ் போகாம வேறு யாரு போவாங்க? – விமர்சகர்களுக்கு நடிகர் வடிவேலு கேள்வி…
நெல்லை மற்றும் தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அமைச்சர் உதயநிதியுடன் இணைந்து இயக்குநர் மாரி செல்வராஜ் மீட்பு பணிகளை மேற்கொண்டார். இயக்குநருக்கு அமைச்சர் உதயநிதி முக்கியத்துவம் கொடுக்கிறாரா?, மாரி செல்வராஜ் ஏன் அங்கு சென்றார் என்பது உள்ளிட்ட கேள்விகளை ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்திருந்த மாரி செல்வராஜ், இது என் ஊரு, என் மக்கள், அண்ணே அம்மாவ காணோம், அப்பாவ காணோம்னு ஃபோன் பண்ணி, மொத்த ஊரும் கதறும்போது என்னால என்ன செய்ய முடியுமோ ஓடிவந்து அதை செஞ்சிட்டு இருக்கேன். ஊர் மக்கள் என்னை நம்புறதுதான் என்னோட பலம். அதுக்காகவாவது நான் எதாச்சும் செஞ்சாகணும்.
அமைச்சர் உதயநிதிக்கு போன் செய்தேன். அவர் என்னோட கதறலை கேட்டதும் சேலத்தில் இருந்தவர் நெல்லை உடனடியாக வந்தார். எங்களுக்கு தேவையான உதவிகள் உடனுக்குடன் கிடைத்தது என்று விளக்கம் அளித்திருந்தார்.
மாரி செல்வராஜுக்கு ஆதரவாக திரைத்துறையினர் சிலரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில், நடிகர் வடிவேலு மாரி செல்வராஜை ஆதரித்ததுடன், அவர் விமர்சிப்பவர்களை நோக்கி கேள்வியும் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலு பேசியதாவது:-
மாரி செல்வராஜ் ஏன் நெல்லை வெள்ளத்தில் மீட்பு பணி செய்கிறார் என்று ஒருவர் கேட்கிறார். அது அவருடைய சொந்த ஊர். அங்கு மேடு எங்க இருக்கு, பள்ளம் எங்க இருக்குன்னு அவருக்குத்தான் தெரியும். என் ஊரில் வெள்ளம் வந்தா நான் போகாம வேறு யாரு போவாங்க? மாரி செல்வராஜ் என்ன அமெரிக்காவில் இருந்தா வர்றாரு? தப்பு தப்பாக பேசுறாங்க.
இதையும் படிங்க – Maari Selvaraj | வெள்ளத்தில் களப்பணியாற்றிய மாரி செல்வராஜ்- நிஜ வாழ்க்கையில் ஹீரோவான இயக்குநர்
உதயநிதி ஏன் போறார்னு ஒருத்தர் கேட்கிறார். அவர் அமைச்சர். அவர்தானே போகணும். நான் சொல்வது அரசியல் அல்ல. மீட்பு பணிகளில் எல்லோருக்கும் பங்கு உள்ளது” என்று கூறினார்.