பைக்கின் கிளட்ச் பிளேட் இப்படி இருந்தால் சிக்கல்தான்.. பிரச்னையை வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறிகள்..!

நம்மில் பெரும்பாலானோரிடம் இன்று பைக் இருக்கிறது. மோட்டார் சைக்கிள்கள் இல்லாத வீடே இல்லை என்னும் அளவை தாண்டி பல வீடுகளில் ஒன்றுக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. நாம் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளின் ஆயுட்காலம் மற்றும் செயல்திறனை உறுதி செய்ய அதனை உரிய மற்றும் சிறந்த முறையில் பராமரிப்பது முக்கியமானது. நீங்கள் ஒரு பைக் ஆர்வலர் என்றால் உங்கள் வாகனத்தின் கிளட்ச் பிளேட்டின் நிலையை அவ்வப்போது கவனிப்பது பெரியளவிளான இயந்திர கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்க மிக அவசியமானது.

எப்போதுமே தேய்மானம் மற்றும் பழுதாவதற்கான அறிகுறிகளை துவக்கத்திலேயே கண்டறிவது உங்களுக்கு ஏற்படும் பெரிய ரிப்பேர் செலவுகளில் இருந்து உங்களை காப்பாற்றும். உங்கள் மோட்டார் சைக்கிளின் கிளட்ச் பிளேட்டை கவனிக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டும் என்பதை காட்டும் சில முக்கிய அறிகுறிகளை இங்கே பார்க்கலாம்.

மைலேஜ் குறைவது :

கிளட்ச்சில் பிரச்னை இருக்கிறது என்பதற்கான முதன்மை அறிகுறிகளில் ஒன்று மைலேஜானது குறிப்பிடத்தக்க வகையில் குறைவது. கிளட்ச் பிளேட்டில் ரிப்பேர் ஏற்பட்டால், அது டிரான்ஸ்மிஷனுக்குள் பிரஷர் பிளேட்டுக்கு எதிராக இருக்க கூடும், இதனால் பைக் எஞ்சின் தொடர்ந்து இயங்க அதிக எரிபொருளைச் செலவாகும். இதனால் உங்கள் மோட்டார் சைக்கிளின் மைலேஜ் குறையும்.

கிளட்ச் ஸ்லிப்:

கிளட்ச் ஸ்லிப் என்பது கிளட்ச் பிளேட்டில் சிக்கல் இருக்கிறது என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும். பைக் எஞ்சினின் RPM-ல் அதிகரிப்பு இருக்கும்போது குறிப்பாக கியர் மாற்றும் போது, அதனுடன் தொடர்புடைய வேகம் அதிகரிக்காமல் இருக்கும்போது இந்த சிக்கல் ஏற்படுகிறது. சேதமடைந்ததிருக்கும் கிளட்ச் பிளேட், பிரஷர் பிளேட்டுடன் சரியாக என்கேஜாக தவறினால் குறிப்பிடத்தக்க பவர் மற்றும் டார்க் இழப்பு ஏற்படுகிறது. வழக்கமாக வாகனத்தை பயன்படுத்துபவர்கள் இந்த அறிகுறியை எளிதாக கண்டறியலாம்.

பிக்அப் மற்றும் ஆக்ஸலரேஷன் :

கிளட்ச் பிளேட் தேய்ந்திருந்தால் பைக்கின் செயல்திறனை குறிப்பாக அதன் ஆக்ஸலரேஷனை (பைக்கின் வேகத்தை அதிகரிக்கும் செயல்) கணிசமாக பாதிக்கும். செயல்திறனில் ஏற்படும் இந்த சரிவு என்பது பைக்கின் டிரான்ஸ்மிஷன் சிஸ்டமில் இருக்கும் பிரச்னையை வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறியாகும். இந்த பிரச்னையை எதிர் கொண்டால் உடனடியாக சரி பார்த்து தேவைப்பட்டால் கிளட்ச் பிளேட்டை மாற்ற வேண்டும்.

பல்சேட்டிங் வைப்ரேஷன் (Pulsating Vibration) :

கியர் லீவரில் ஒரு குறிப்பிட்ட அல்லது வலுவான வைப்ரேஷன் ஏற்படுவது என்பது பெரும்பாலும் கிளட்ச் பிளேட் அல்லது முழு கிளட்ச் அசெம்பிளியிலும் இருக்கும் கடும் பிரச்னையை குறிக்கிறது. இத்தகைய அதிர்வுகள் மேலும் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

கிளட்ச் அசெம்பிளி இருக்கும் எஞ்சினின் பக்கத்திலிருந்து ஏதேனும் வித்தியாசமான சத்தங்கள் வெளிப்பட்டால், உடனடியாக கிளட்ச் அசெம்பிளியை முழுயாக் பரிசோதிக்க வேண்டும். துவக்கத்திலேயே இந்த அறிகுறியை கவனித்து சரி செய்து விட்டால், பெரிய செலவு ஏற்படாமல் தடுக்கலாம். உங்கள் பைக்கில் கிளட்ச் தொடர்பான முக்கிய சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்க, பைக்கை முறையாக இயக்குவது, ரைடிங் டெக்னிக்ஸ்களை பின்பற்றுவது, குறிப்பிட்ட கால இடைவெளியில் செக் செய்து கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *