அடுத்தவன் புள்ளைய ஊட்டி வளர்த்தா தான் பிள்ள தானா வளரும்! கேப்டன் வாழ்க்கையில் அது பொய்யா போச்சே
விஜயகாந்தின் மறைவு இந்தியா முழுவதும் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா தவிற வேறெந்த மொழிகளிலும் நடிக்காமல் விஜயகாந்த் இருந்தாலும் மற்ற மொழி சூப்பர் ஸ்டார்களுடன் ஒரு நெருக்கமான நட்போடுதான் இருந்திருக்கிறார் விஜயகாந்த்.
அவர் மறைவுக்கு சிரஞ்சீவி, மம்மூட்டி ஆகியோர் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மத்திய அரசு சார்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினார். ரஜினி, கமல், விஜய் என பல முன்னணி நடிகர்கள் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
விஜயின் வளர்ச்சிக்கு ஆரம்ப விதையை விதைத்தவர் விஜயகாந்த். அதே போல் சூர்யாவுக்கும் உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த் தான். சூர்யாவை ப்ரோமோட் செய்ய பெரியண்ணா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து சூர்யாவை தூக்கி விட்டார் விஜயகாந்த்.
இப்படி பல நடிகர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த ஒரு கடவுளாக திகழ்ந்தவர் விஜயகாந்த். ஆனால் அவர் மகனால் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை. விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடந்த போதும் அவருடைய மகனுக்காக யாரும் உதவ முன்வரவில்லை.
அப்போது விஜயை கேப்டன் ரசிகர்கள் திட்டி தீர்த்தனர். கேப்டன் மகனுக்காக விஜய் அவருடைய படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுக்கலாம் என்றெல்லாம் பேசி வந்தார்கள். விஜய் , சூர்யாவுக்கு செய்ததை போல் தன் மகன் படத்திலும் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த்.
சகாப்தம் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் மகன் சண்முக பாண்டியனோடு சேர்ந்து நடித்தார் விஜயகாந்த். அதே போல் ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தையும் தன் மகனுக்காக ஆரம்பித்தார் விஜயகாந்த். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அந்த படம் அப்படியே டிராப் ஆனது.
இனி வரும் காலங்களிலாவது அவருடைய மகனுக்கு பெரிய பெரிய நடிகர்கள் விஜயகாந்த் இடத்தில் இருந்து ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.