சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்வில் நிம்மதி… ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
தை முதல் நாள் உழைப்பின் திருநாளாக – தமிழர் பெருநாளாக கொண்டாடி வருகிறார்கள். வீடுகளில் வண்ண,வண்ண கோலங்கள் இட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி, கரும்பு, பழங்கள், புது பானையில் பொங்கலிட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். அந்தவையில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பிரபல இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் “வேட்டையன்” என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினி காந்த் நடித்து வருகிறார். இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படமாகும். பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினி காந்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
https://twitter.com/LycaProductions/status/1746744036285612322
ரசிகர்களுக்கு ரஜினி வாழ்த்து
இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் தனது வீட்டு முன் திரளும் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார். அந்த வகையில், தைத்திங்கள் முதல் நாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை போயஸ் கார்டன் பகுதியில் இருக்கக்கூடிய நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் முன்பு ரசிகர்கள்அவரைக் காணக்கூடியிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் முன்பு கையசைத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
நேர்மை இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதி
இதன் தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும் என ரஜினி தெரிவித்தார்.