உடலில் இந்த சத்து அதிகமாக இருந்தால் இவ்ளோ நோய்கள் வருமா? தெரிஞ்சுக்கோங்க
உடலில் புரோட்டீன் சத்து அதிகமாக இருந்தால் உடலின் இதய நோய் முதல் சிறுநீரக நோய் வரை பாதிக்கும்.
மனிதனது வாழ்க்கையில் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்காக நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நமது உடல் தசைகள் மற்றும் எலும்புகள் அமிகோ அமிலங்களை கொண்டு உருவாக்கப்பட்டது. அந்த அமினோ அமிலங்களை உருவாக்குவது புரோட்டீன் சத்தாகும்.
புரோட்டீன் நமது உடலின் செயற்பாட்டிற்கு பெரும் பங்கை தருகிறது. புரோட்டீன் சத்தை நாம் ஒரு நாளுக்கு போதுமான அளவில் உட்கொள்ள வேண்டும்.
அதை அதிகளவில் உட்கொண்டால் உடல் பல நோய்களுக்கு உள்ளாகும். இந்த சத்து கூடினால் உண்டாகும் நோய்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. உடல் பருமன்
ஒருவர் அதிகமாக புரோட்டீன் கொண்ட உணவுகளை உண்பதால் அந்த புரோட்டின்கள் கொழுப்பாக மாறி உடலில் தேங்கி நிற்கும் இதனால் உடல் பருமன் அதிகரிக்கும்.
2.வாய் துர்நாற்றம்
புரோட்டீனை மட்டும் உட்கொண்டு கார்போஹைட்ரேட் சத்தை குறைக்கும் போது புரோட்டீன்கள் உடலினுள் சென்று அழுகிய பழம் கொடுக்கும் துர்நாற்றத்தை கொடுக்கும். இதனால் உடலில் இரசாயன உற்பத்தி அதிகரித்து உடல் முழுவதும் துா்நாற்றம் வீசும். இது வாயின் வழியாக வெளியே வரும்.
3.வயிற்று போக்கு
புரோட்டீனை அதிகம் உட்கொண்டால் நார்ச்சத்து இல்லாமல் செய்து விடும். இதனால் வயிற்றுப்போக்கு அதிகரிக்கும். இதை தடுப்பதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
4.சிறுநீரக சேதம்
புரோட்டீனில் அதிக அமினோ அமிலங்களில் நைட்ரஜன் காணப்படுவதால் அந்த நைட்ரஜனை வெளியேற்ற சிறுநீரகங்கள் கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் தான் சிறுநீரகங்களில் பிரச்சனை தோன்றுகின்றது.
5.இதய நோய்
தாவர வகை புரோட்டீன்களான பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள், மீன் மற்றும் கடல் உணவுகள் போன்றவை இதய ஆரோக்கியத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆனால் மாட்டிறைச்சி பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவை உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதய நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும்.