இது தொடர்ந்தால்.. பொங்கல் பண்டிகையில் பஸ் கட்டணம் விமானக் கட்டணத்தையே மிஞ்சும்.. அதிர வைத்த ஓபிஎஸ்
சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்தால், பொங்கல் பண்டிகையின் போது பஸ் கட்டணம் விமானக் கட்டணத்தை மிஞ்சும் நிலை உருவாகும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர், பெங்களூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசிப்போர் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். ஆனால் ரயில்களில் நான்கு மாதத்திற்கு முன்பே டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து போய் விட்டது.
ஆம்னி பேருந்துகள் கட்டணம் நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு உள்ளது. மக்களின் ஒரே நம்பிக்கை அரசு பஸ்கள் தான். இந்த சூழ்நிலையி கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பதால், பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊருக்கு போவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்தால், பொங்கல் பண்டிகையின் போது பஸ் கட்டணம் விமானக் கட்டணத்தை மிஞ்சும் நிலை உருவாகும்.