இரவு தூங்கும் முன் இந்த பொருட்களை முகத்தில் தடவினால், காலையில் முகம் ஜொலிக்கும்
அழகான, பளபளப்பான சருமத்தை யார் தான் விரும்பமாட்டார்கள்? இதற்காக பல்வேறு வகையான பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். அப்படி நீங்களும் பளபளப்பான சருமத்தைப் பெற விரும்பினால், இரவு தூங்குவதற்கு முன் சில சிறப்பு பொருட்களை முகத்தில் தடவி வந்தால் பலன் பெறலாம்.
தேன் முகத்திற்கு மிகவும் நன்மை செய்யும். இது சருமத்தை ஈரப்பதமாக்க உதவும். இது தவிர, முகப்பரு மற்றும் தழும்புகளை போக்க உதவும்.
பளபளப்பான சருமம் வேண்டுமெனில் ரோஸ் வாட்டரை இரவு தூங்குபவதற்கு முன் முகத்தில் தடவலாம். இது சருமத்தை மென்மையாக்க உதவும்.
கற்றாழை ஜெல் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து மென்மையாக்குகிறது.
இரவு தூங்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவலாம். இதற்கு முகத்தை கழுவி பின் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.
இரவு தூங்குவதற்கு முன்பு பச்சைப் பாலை முகத்தில் தடவினால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்லை நீக்க முடியும்.