அதிர்ஷ்டம் இருந்தால் ரூ.120 கோடி மதிப்புள்ள வீடு., ரூ.40 கோடி ரொக்கம்., பிரித்தானியாவில் அரிய லொட்டரி!
பிரித்தானியாவில் ரூ.120 கோடி மதிப்பிலான வீட்டையும், அதனுடன் கோடிக்கணக்கில் பணத்தையும் அள்ளிக்கொடுக்கும் அரிய லொட்டரியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
அனைவருக்கும் சொந்தமாக வீடு வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலர் தங்களின் பண பலத்திற்கு ஏற்ப வீடு கட்டுவார்கள்.
பலர் தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒரு சிறிய வீட்டைக் கட்ட செலவிடுகிறார்கள். ஆனால் அவர்களால் அவர்களது கனவை நிறைவேற்ற முடியாமலும் போகும்.
இதற்கு நிதி நெருக்கடியும் ஒரு காரணம். சொல்லப்போனால், இன்றைய காலக்கட்டத்தில் நிலத்தின் விலை அதிகரித்து வருவதால், ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு அமைப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், வெறும் 10 பவுண்டுகளுக்கு (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 3940) பங்களா வாங்கலாம் என்று சொன்னால்… உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம், ஆனால் அது முற்றிலும் உண்மை.
குறித்த பங்களா பிரித்தானியாவில் உள்ள செயின்ட் ஆக்னஸ் கடற்கரையிலிருந்து (St Agnes beach) சற்று தொலைவில் அமைந்துள்ளதாக தி சன் ஆங்கில இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் அனைவரும் விரும்பும் அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், ஏன் இவ்வளவு மலிவாக வீடு கிடைக்கும் என்ற கேள்வி எவருடைய மனதிலும் எழும்.
Omaze Million Pound House Draw
உண்மையில் இது ஒரு வகையான அதிர்ஷ்டக் குலுக்கல் என்று சொல்லலாம். இந்த லொட்டரியில் வெற்றி பெறுபவருக்கு வசதிகளுடன் கூடிய பங்களா வழங்கப்படும்.
பிரபல நடிகர் Alistair McGowan-னும் குலுக்கல் லொட்டரியை விளம்பரப்படுத்துகிறார். இந்த குலுக்கல் மூலம் கிடைக்கும் பணம் பிரபல NGO WWFக்கு வழங்கப்படும்.
இந்த அமைப்பு அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல், காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் காடழிப்பை நிறுத்துதல் ஆகியவற்றில் செயல்படுகிறது.
அனைத்து வசதிகளுடன் அழகான வீடு
இந்த வீட்டில் அறைகள், பார்க்கிங், அழகான முற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டிடத்தை சுற்றி அழகான தோட்டம் உள்ளது.
இந்த அழகிய வளாகத்தில் அமர்ந்து இயற்கைக்கு அருகில் வாழலாம். வீட்டில் இரண்டு இரட்டை படுக்கையறைகள் மற்றும் தரை தளத்தில் ஒரு இலவச குளியலறை உள்ளது.
இது மிகப் பாரிய ஷவர் அறையையும் கொண்டுள்ளது. வீட்டின் பின்புறம் உள்ள தோட்டங்கள் அழகிய நிலப்பரப்பு உள்ளது.
இந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு?
இப்போது நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், இந்த வீடு குலுக்கலில் சொந்தமாகிவிடும். இந்த வீட்டின் அசல் விலை 3 Million Pounds (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.120 கோடி) ஆகும்.
குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர் இந்த வீட்டை வாடகைக்கு விட்டாலும் மாதம் 4,000 Pounds வரை (இலங்கை பிணமதிப்பில் ரூ. 15 லட்சம்) வாடகைப் பணம் கிடைக்கும்.
இதுதவிர இந்த பங்களாவுடன் சேர்த்து 1 Million Pounds (சுமார் ரூ.40 கோடி) பரிசாக வழங்கப்படவுள்ளது.