வீடு வாங்கினால் மனைவி இலவசம் : சர்ச்சை விளம்பரத்தால் வந்த ஆபத்து

சீனாவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட விளம்பரம் அந்த நிறுவனத்திற்கே ஆபத்தாக முடிந்துள்ளது. அது என்னவெனில் வீடு வாங்கினால் மனைவி இலவசம் என நிறுவனம் விளம்பரம் வெளியிட அது அந்த நிறுவனத்திற்கே அபராதம் விதிக்கும் அளவிற்கு சென்றுள்ளது.

சீனாவின் தியான்ஜினில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ” வீடு வாங்குங்கள், மனைவியை இலவசமாக பெறுங்கள்” என்ற விளம்பரத்தை ஒளிபரப்பியது.

வீடுகளை வாங்கி தரும்படி
இந்த விளம்பரத்தை பார்க்கும் மக்கள், வீடுகளை வாங்கி தரும்படி தங்களை தேடி வருவார்கள் என அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் நினைத்து காத்திருந்தது.

விளம்பரத்தை கண்ட பெண்கள் கடுமையாக கொந்தளித்தனர். சமூகவலைதளத்தில் கடும் எதிர்ப்புகளை பெண்கள் தெரிவித்தனர். பெண்களை ஏதோ பரிசு பொருட்களைப் போலக் காட்டும் இந்த விளம்பரத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
இது மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், அந்நாட்டின் ரியல் எஸ்டேட் கண்காணிப்பு அமைப்பு விசாரணையில் களம் இறங்கியது.

தவறாக புரிந்து கொண்ட மக்கள்
அப்போது அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் தங்கள் விளம்பரத்தைப் பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஒரு வீட்டை வாங்கி, அதை உங்கள் மனைவிக்குக் கொடுங்கள் என்பதே தங்கள் விளம்பரம் என ரியல் எஸ்டேட் நிறுவனம் விளக்கம் அளித்தது.

இருப்பினும், அந்த நிறுவனத்திற்கு 3 லட்சம் அபராதம் விதித்த சீன கண்காணிப்பு அமைப்பு விளம்பரத்தை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *