30 நாள் வெறும் வயிற்றில் 2 துண்டு பப்பாளி சாப்பிட்டா இந்த 5 அற்புத மாற்றம் உங்க உடம்புல நடக்குமாம்… இன்னைக்கே சாப்பிட ஆரம்பிங்க…
பப்பாளி வெப்ப மண்டலப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் பழம். குறிப்பாக ஆசிய நாடுகளில் அதிகமாகக் கிடைக்கும். இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் நிறைய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். இதை யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம், தினமும் எடுத்தால் என்ன ஆகும் என்பது பற்றி தான் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
பப்பாளி பழத்தை தினமும் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு முன் அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் என்றும் தெரிந்து சாப்பிட வேண்டியது முக்கியம்.
பழங்களிலேயே ஒருசிலவற்றை மட்டும் தான் காயாகவும் பழமாகவும் சாப்பிட முடியும். அவற்றில் ஒன்று தான் பப்பாளி. இதிலுள்ள பைபன் என்னும் என்சைம் அஜீரணக் கோளாறு தொடங்கி உடல் பருமன் வரைக்கும் ஏராளமான பிரச்சினைகளைச் சரிசெய்யும்.
குறிப்பாக தொடர்ந்து காலை வெறும் வயிற்றில் 2 துண்டு பப்பாளி பழத்தைச் சாப்பிட்டு வருவதால் உடலில் கீழ்வரும் அற்புதமான மாற்றங்கள் நடக்கும் என மருத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வயிறு உப்பசம், மலச்சிக்கல் தீர
தொடர்ச்சியாக தினமும் பப்பாளி பழத்தைச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சினையும் தீரும். அதேபோல சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் வயிறு உப்பசமாகி விடும்.
இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் தொடர்ச்சியாக பப்பாளி பழத்தை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது. நாம் எடுத்துக் கொள்ளும் புரத உணவுகளை பப்பாளியில் உள்ள என்சைம் மிக எளிதாக ஜீரணிக்க உதவி செய்கிறது. இதனால் அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், மலச்சிக்கல், குடல் அழற்சி நோய் ஆகியவற்றைச் சரிசெய்யும்.
இன்ஃபிளமேஷன்களை எதிர்த்து போராடும்
உடலில் ஏற்படும் நாள்பட்ட இன்ஃபிளமேஷன்கள் தான் பல்வேறு நோய்களுக்குக் காரணமாகின்றன. அதற்கு நம்முடைய உணவில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் கொண்ட உணவுகளைச் சேர்த்துக் கொள்வது அவசியம்.
கரோட்டினாய்டுகள் அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு இன்ஃபிளமேஷன்கள் குறையும். அதில் முக்கியமான உணவாக பப்பாளியை சொல்லாம்.
பப்பாளியை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது உடலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களை எதிர்த்துப் போராடும்..
இதய ஆரோக்கியம் மேம்படும்
பப்பாளி பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் லைகோபின் உள்ளிட்டவை பப்பாளியில் நிறைந்து இருக்கின்றன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவைப்படுபவை.
இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து, எச்டிஎல் (HDL Cholesterol) என்னும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவி செய்யும் என்று மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
புற்றுநோய் வராமல் தடுக்கும்
பப்பாளி பழத்தில் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இது புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது.
பப்பாளி பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடலில் ஃப்ரீ – ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் வாய்ந்தது. குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவி செய்யும்.