இந்த கீரை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும்..!

கீரை என்பது இயற்க்கை அன்னை நமக்கு கிடைத்த ஒரு அறிய பொக்கிஷம் என்றே கூறலாம். அதில் உள்ள சத்துக்கள் அளப்பரியது. 10 வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் 50 கிராம் அளவாவது கீரை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரை : கண் தொடர்பான அனைத்து குறைபாடுகளை சரிசெய்யும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். அதீத உடல் எடையை குறைக்கும்.

கல்யாண முருங்கை கீரை – பெண்களின் கருப்பை குறைபாடுகளை தீர்க்கும். சோகை குணமாகும். சிறுநீரக நோய்களை குணமாக்கும்.

தவசிக்கீரை- இருமலை போக்கும்.

சாணக்கீரை- காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.

அகத்திக்கீரை- கண் பார்வையைத் தெளிவாக்கும். ரத்தசோகையை குணமாக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.

சாரணை கீரை – ஈரல் வலிமை பெறும். முகப்பருக்களை நீக்கும். பல் மற்றும் ஈறுகள் பலப்படும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை- ரத்தம் சுத்தமாகும். மதுப்பழக்கத்தால் வலுவிழந்த ஈரல் பலமாகும். பசியை உண்டாக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை- ஞாபக சக்தியைப் பெருக்கும். ஈறுகளை பலப்படுத்தும். இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பார்வை தெளிவாகும்.

முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

பொடுதலைக் கீரை – தலையில் ஏற்படுகின்ற பொடுகு தொல்லைகளை தீர்க்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். அக்கி புண்களை குணமாக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளிக்கீரை சிறுநீரக கற்களை கரைக்கும். உடலில் ஏற்படுகின்ற வீக்கங்களை வற்றச் செய்யும். செரிமான கோளாறுகளை சரி செய்யும்.

ஆரைக் கீரை – நீர்க்கடுப்பு, சிறுநீர்தாரை குணமாகும். கை கால்களில் ஏற்படும் குடைச்சல் நீங்கும். வாய்ப் புண்கள் குணமாகும்.

பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

கானா வாழைக் கீரை – கபம் தொடர்பான குறைபாடுகளை சரிசெய்யும். உடல் இழந்த ரத்தத்தை அதிகரிக்கும். உடலில் ஏற்படுகின்ற புண்களை குணமாக்கும்.

மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.

நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *