வீட்டில் அவல் இருந்தால் போதும்.. சட்டென இந்த இன்ஸ்டன்ட் காலை உணவை செய்திடலாம்.!

நம் வாழ்க்கையில் காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே அதை ஒருநாளும் தவறவிடக்கூடாது. ஆனால் வேலைக்கு செல்லும் அவசரத்தில் காலை உணவு செய்ய நேரமில்லாததால் பலர் அதை தவிர்த்து விடுவார்கள்.
அப்படிபட்டவர்களுக்காக தான் காலையில் ஈஸியாக செய்யக்கூடிய இந்த பிரேக்பாஸ்ட் அவல் ரெசிபி.
தேவையான பொருட்கள் :
அவல் – 1 கப்
பச்சரிசி – 1/4 கப்
ஊறவைத்த பாசி அறுப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் – 3 (நறுக்கியது)
இஞ்சி – தேவையான அளவு (பொடியாக நறுக்கியது)
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – தேவையான அளவு (நறுக்கியது)
சீரகம் – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – சிறிதளவு
செய்முறை :
முதலில் ஒரு கப் அவல் எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு மூன்று முறை நன்கு அலசி தண்ணீரை முழுவதும் வடிக்கட்டி கொள்ளவும்.
இதேபோல் இரண்டு முறை அவலை அலசி தண்ணீரை முழுவதுமாக வடிய விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து அதை அப்படியே ஒரு 5 நிமிடங்களுக்கு முட்டிபோட்டு வைக்கவும்.
அஞ்சு நிமிடங்களுக்கு பிறகு பார்த்தல் அவல் அவ்வளவு சாப்டாக இருக்கும். அந்த அவலை கைகளை கொண்டு நன்றாக மசித்து விடவேண்டும்.
அதனுடன் பச்சரிசி மாவு, பாசிப்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, தயிர், வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகள், சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு எல்லாத்தையும் சேர்த்து சாப்பிட்டாக பிசைந்துகொள்ளவும்.
தற்போது மாவிலிருந்து கொஞ்சமாய் எடுத்து உருண்டையாக உருட்டி கொள்ளவும்.
நாம் சப்பாத்திக்கு எடுப்பதை விட கொஞ்சம் பெரிசாக உருண்டை இருக்கட்டும்.
தற்போது வாழையிலையில் எண்ணெய் தடவி மாவு உருண்டையை மெல்லிசாக தட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் தட்டிய மாவை போட்டு சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இரண்டு புறமும் நன்கு வேகும் அளவிற்கு திருப்திருப்பி வேகவிடவும்.
அவ்வளவு தான் 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சுவைமிகுந்த காலை உணவு ரெடி..