தினமும் அதிகாலையிலும் மாலை நேரங்களிலும் வீட்டின் வாசலில் அகல் விளக்கு ஏற்றிவைத்தால்…

மண் அகல்: தினமும் அதிகாலையிலும், மாலை நேரங்களிலும் வீட்டின் வாசலில் அகல் விளக்கு ஏற்றிவைத்தால் சகல சம்பத்துகளும் வீட்டில் நிறைந்திருக்கும். துன்பங்கள் படிப்படியாக குறையும். துஷ்ட சக்திகள் உள்ளே நுழைவதற்கு அச்சப்படும்.

வெண்கல விளக்கு: நிரந்தர வருமானத்துக்கு வாய்ப்பு உண்டாகும். வீட்டில் நோய் நொடியின்றி ஆரோக்யமாக இருக்க வெண்கல விளக்கு தீபம் கைகொடுக்கும்.

பஞ்சலோக விளக்கு: பஞ்சலோகமும் கலந்திருக்கும் இந்த விளக்கை ஏற்றுவதால் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற்று சிறப்பாக வாழலாம். வீட்டில் கண்திருஷ்டி பிரச்னைகள் காணாமல் போகும். தொழிலிலும், வேலையிலும் சிறப்பாக முன்னேற்றமடைய பஞ்ச லோக விளக்கை ஏற்றி வழிபடுங்கள்.

இரும்பு விளக்கு: சனி தோஷ காலங்களிலும், ஏழரை சனியில் இருப்பவர்களும் இரும்பு விளக்கை ஏற்றி வழிபடுவதன் மூலம் சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம். குடும்பத்தில் நீடித்திருக்கும் வறுமையை விரட்டவும், தீர்க்க முடியாத சிக்கலுக்கும் இரும்பு விளக்கு வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.

வெள்ளி விளக்கு: வெள்ளி விளக்கில் மஹாலஷ்மியும், விஷ்ணுவும் வாசம் செய்வதாக ஐதிகம். வீட்டில் லஷ்மி கடாட்சம் நிரந்தரமாக தங்குவதற்கும் பணப்புழக்கம் அதிகரிக்கவும் நிம்மதியான வாழ்வுக்கும் வெள்ளி விளக்கு வழிபாடு அவசியம்.

குத்துவிளக்கில் மயில், அன்னபட்சி, வேல் வடிவில் விளக்குகள் இருந்தாலும் வீட்டில் ஏற்றுவதற்கு உகந்தது வேல் வடிவ விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *