இந்த திசையில் துடைப்பத்தை வைத்தால் தான் வீட்டில் செல்வம் தங்குமாம்…!
இந்து மத நூல்களின் படி துடைப்பம் லட்சுமி தேவியின் சின்னம் என்று கூறப்படுகிறது. உங்கள் வாழ்க்கை நிலைக்கும் வீட்டில் நீங்கள் துடைப்பத்தை வைக்கும் திசைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, துடைப்பத்தை வாஸ்துப்படி சரியான திசையில் வைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறு, பெரிய சேதத்தை ஏற்படுத்தும். வாஸ்துவின் இந்த விதிகளை பின்பற்றினால், நீங்கள் சந்திக்க இருக்கும் பிரச்சனைகளில்இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.
துடைப்பம் வைக்க சிறந்த திசை எது? : வீட்டில் வைக்கும் பொருட்கள் அனைத்தையும் திசை பார்த்து வைக்க வேண்டியது அவசியம் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அதே போல துடைப்பத்தையும் சரியான திசை பார்த்து வைக்க வேண்டியது அவசியம். துடைப்பத்தை பராமரிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துமாறு கூறப்படுகிறது. வீட்டில் ஈசானிய மூலை, அக்னி மூலை, நிருதி மூலை மற்றும் குபேர மூலை என நான்கு திசைகள் உள்ளன. ஆனால், தெற்கு மற்றும் மேற்கு இடையே துடைப்பத்தை வைப்பது மிகவும் பொருத்தமானதாக கருதப்படுகிறது. அதே போல, துடைப்பத்தை செங்குத்தாளாக நிற்க வைக்க கூடாது என்கிறார் வாஸ்து நிபுணர் பண்டிட். துடைப்பத்தை எப்போதும் படுத்தவாறு வைக்க வேண்டும். துடைப்பத்தை முகம் எப்போதும் கிழக்கு நோக்கி வைப்பது அதிக பலன்களைத் தரும்.
வீட்டை துடைப்பத்தால் சுத்தம் செய்ய உகந்த நேரம் எது? : நம்மில் பலர் சுத்தத்தை அதிகம் விரும்புபவராக இருப்போம். அதனால், வீட்டை அடிக்கடி துடைப்பத்தால் பெருக்கி, துடைத்துக்கொண்டே இருப்போம். ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, அப்படி செய்வது தவறு என கூறப்படுகிறது. அப்படி செய்வதால், நிறைய சேதத்தை ஏற்படுத்தும். வீட்டை சுத்தம் செய்வதற்கு சரியான நேரம் காலை மற்றும் மாலை ஆகும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, முதலில் காலையில் எழுந்ததும், வீட்டை துடைப்பதற்கு முன், முதலில் இறைவனை வணங்க வேண்டும். இதன் பிறகு வீட்டை துடைக்கவும்.
துடைப்பத்தை பயன்படுத்துவதற்கான திசை எது? : துடைப்பத்தை வைக்கும் திசையை போல, அதை பயன்படுத்தும் திசையும் முக்கியமாக கருதப்படுகிறது. வீட்டை நீங்கள் சுத்தம் செய்யும் போது, முதலில் மேற்கு அல்லது வடக்கு திசையில் இருந்து துடைக்கத் தொடங்குங்கள். இதனால், உங்கள் வீட்டில் லட்சுமி தங்குவதோடு, லட்சுமியின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அதே சமயம், துடைத்த பின், அழுக்கு குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும். குப்பைகளை ஆங்காங்கே குவித்து வைத்தால், உங்களின் வறுமையும் கஷ்டங்களும் அதிகரித்துக் கொண்டே போகும்.
வீட்டில் உள்ளவர்கள் வெளியேறிய உடனே வீட்டை துடைக்கக் கூடாது : பெரும்பாலும் பலர் தங்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் வெளியே வந்தவுடன் வீட்டை துடைப்பார்கள், இப்படி செய்யாதீர்கள். வீட்டில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், உடனே துடைக்கக் கூடாது. இது உங்கள் வேலையில் வெற்றியை பாதிக்கும்.
துடைப்பம் வாங்க சிறந்த நாள் எது? :புதிய துடைப்பம் வாங்க எல்லா நாட்களும் சிறந்த நாட்கள் என கூறப்படுகிறது. ஆனால், சனிக்கிழமை துடைப்பம் வாங்குவது இன்னும் நல்ல பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்குமாறு வாங்க வேண்டாம். துடைப்பம் சிறியதாக இருந்தால், அதை விரைவில் மாற்றவும். விளக்குமாறு நீளமாக இருந்தால் துடைப்பது எளிதாக இருக்கும். முதுகு வலி இருக்காது, பல நன்மைகள் கிடைக்கும்.