சூழலுக்கு மரியாதை கொடுக்கலனா, இப்படி தான் நடக்கும்.. இங்கிலாந்தை கிண்டல் செய்த டிவில்லியர்ஸ்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. ஹைதராபாத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி டாசை இழந்தது. இதை அடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாட தொடங்கிய நிலையில்,சுழற் பந்துவீச்சாளர்களையும் அடித்தாட முற்பட்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ் விளையாடத் தொடங்கினர்.

ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 76 ரன்கள் எடுத்திருக்க முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட 127 ரன்கள் தான் குறைவாகும். இந்த நிலையில் இந்த ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் டிவில்லியர்ஸ், இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ் தொடக்கத்தில் ஒரு ஓவருக்கு எட்டு அல்லது ஒன்பது ரன்களை எடுத்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்திருக்கிறார்கள்.

இதனை நீங்கள் புத்திசாலித்தனம், தைரியம் அல்லது பேஸ் பால் என்று எல்லாம் அழைக்க தேவையில்லை. சூழலுக்கு தகுந்தார் போல் இந்திய அணி வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும். எப்படி ஆடினால் நீங்கள் முன்னிலை பெறுவீர்கள் என்பதில் தான் போட்டியின் மகிமையே இருக்கிறது.

போட்டியின் சூழல் மாறினால் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களுடைய தருணத்திற்காக நீங்கள் மீண்டும் காத்துக் கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களால் சூழலைப் புரிந்து கொண்டு விளையாட முடியவில்லை என்றால் அது நிச்சயம் உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

நீங்கள் பேஸ் பால் அல்லது எந்த மாதிரி பாலை விளையாடினாலும் சரி. உங்களுக்கு அது நன்மையை கொடுக்காது என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். இதை போன்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன் இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சை எதிர்பார்த்தது போல் இல்லை என்றும் இந்திய வீரர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *