பச்சை வாழைப்பழத்தை பார்த்தால் விடாதிங்க… உடலுக்கு அவ்வளவு நல்லது இருக்கு!

பச்சை வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்தின் பெயர் Resistant Starch என்றழைக்கப்படுகிறது. இது எளிதாக கரையும் நார்ச்சத்தாகும். நன்மை பயக்கும் குடல் பாக்ட்ரீயாவுக்கு உணவளிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவும்.

மேலும் பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து உங்களின் குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்னையை தீர்க்கும்

பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் போட்டாஸியம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. போட்டாஸியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும். இது நெஞ்சு வலி வருவதை தடுக்கும்.

பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, செரிமான இயக்கத்தை மெதுவாக்கி குடல் ஊட்டச்சத்தை உள்ளிழுத்துக் கொள்ள உதவும்.

பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் Resistant Starch உங்களின் வயிறு நிரம்பிய உணர்வை தரும். அதன்மூல், நீங்கள் அதிக கலோரிகளை எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். இது உடல் எடை குறைப்பில் உதவும்.

மற்ற வாழைப்பழங்களை போல் அல்லாமல் பச்சை பழத்தை சாப்பிட்டால் உங்களின் ரத்த சர்க்கரை அளவில் பெரிய தாக்கம் இருக்காது.

பச்சை வாழைப்பழத்தில் போட்டாஸியம் மட்டுமின்றி வைட்டமிண் சி மற்றும் வைட்டமிண் B6 ஆகியவை உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *