100 ரன் டார்கெட் வைத்தால் போதும்..4வது இன்னிங்சில் இந்தியா அடிக்காது..தென்னாப்பிரிக்க கேப்டன் பேச்சு
மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் சமமாகிவிடும். இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 55 ரன்கள் ஆட்டம் இழக்க இந்திய அணி 153 ரன்கள் மட்டும் தான் எடுத்தது.
இதனை அடுத்து 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்காவில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.
36 ரன்கள் பின் தங்கிய நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களுடன் பேசிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டீன் ஏல்கர் இது போன்ற ஒரு ஆடுகளத்தில் தாம் விளையாடியது இல்லை. கேப்டனில் இப்படி ஒரு ஆடுகளத்தை நான் பார்த்ததும் இல்லை என்று டீன் எல்கார் கூறினார்.
இந்த ஆடுகளத்தில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார். இது குறித்து பேசிய அவர், நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு ஒரு நூறு ரன்களை இலக்காக நிர்ணயித்தாலே தங்கள் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். தங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் பேட்டிங்கை சுக்குநூறாக உடைக்க முடியும். அதுவும் இது போன்ற ஆடுகளத்தில் அது நிச்சயம் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆடுகளத்தை முதலில் நான் பார்த்தபோது இந்த அளவுக்கு அது மோசமாக செயல்படும் என்று நான் கணிக்கவில்லை. ஆனால் ஏன் ஆடுகளம் இவ்வாறு செயல்பட்டது என்றும் தங்களுக்கு தெரியவில்லை என கூறியுள்ளார். எனினும் பந்தை சரியான இடத்தில் வீசினால் மட்டுமே விக்கெட்டுகள் கிடைக்கும் என்று கூறியுள்ள டீன் எல்கர், அதனை முதலில் இந்திய வீரர்கள் சிறப்பாக செய்ததாகவும் கூறியுள்ளார்.ஆட்டத்தின் முதல் பகுதியில் ஆடுகளம் மிகவும் வேகமாக செயல்பட்டதாக சுட்டிக் காட்டிய டீன் எல்கார், பந்து பழையதாக மாறியும் ஸ்விங் ஆனதாக கூறினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நேற்று ஒரு வித்தியாசமான நாளாக இது அமைந்ததாகவும் அவர் கூறினார்.