இதை வீட்டு வாசலில் கட்டி தொங்க விட்டால், கண் திருஷ்டி உள்ளே வராது..!

ண்ணுக்குத் தெரியாத கண்திருஷ்டியினாலும், கெட்ட எண்ணம் கொண்டவர்களின் வயிற்றெரிச்சலினாளும் பாதிக்கப்பட்டவர்கள் எப்பாடு பட்டாலும் வெளியில் வருவது மிகவும் சிரமம்.

கண்அடி பட்டால், அதற்கான கஷ்டத்தை கட்டாயம் நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். இது பல பேருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

இப்படிப்பட்ட சிரமத்தில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் என்றால், கண் திருஷ்டியும், கெட்ட சக்தியும் நம் வீட்டு நிலவாசபடியை தாண்டி உள்ளே வரவிடக் கூடாது. அதற்கு என்னதான் செய்வது? ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அந்த காலத்தில் எல்லாம் வீட்டு வாசலிலேயே தண்ணீர் வைத்து காலைக் கழுவிக் கொண்டு தான் வீட்டிற்குள் நுழைவார்கள். காரணம் வெளியில் நல்லவையும் இருக்கும். கெட்டதும் இருக்கும். வீதியில் கெட்டது எதையாவது மிதித்து இருந்தாலோ, அல்லது தாண்டி இருந்தாலோ அதன்மூலம் நமக்கு நோய் தொற்று, கிருமித் தொற்று ஏற்படலாம் என்பதற்காகவும், அடுத்தவர்கள் பிரச்சனைக்காக சுற்றி போட்ட எலுமிச்சம்பழம், மிளகாய் இவைகளைத் தாண்டி இருந்தால் அதில் இருக்கும் கெட்ட சக்தி நம்மை தொற்றிக்கொண்டு இருந்தால், அதன் பாதிப்பு வீட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காகவும் வாசலிலேயே தண்ணீர் வைத்து, காலை கழுவிக்கொண்டு, தலையில் தண்ணீர் தெளித்து கொண்டுதான் வீட்டுக்குள்ளேயே நுழைவார்கள்.

இப்படிப்பட்ட பழக்கம் எல்லாம் காற்றில் கரைந்து போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சூழ்நிலையில், நம் வீட்டிற்குள் கெட்ட சக்தியையும், கண் திருஷ்டியும், கெட்ட எண்ணம் கொண்டவர்கள் கூட, வீட்டிற்கு உள்ளே நுழைய விடாமல் தடுக்க நம்மால் ஒரு பரிகாரத்தை சுலபமாக செய்ய முடியும்.

இதற்கு ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு, சதுரவடிவிலான சிகப்பு துணி, சிகப்பு நூல் மட்டுமே போதும். ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு கைப்பிடி அளவு கல் உப்பினை உங்கள் உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு, பூஜை அறையில் இருக்கும் உங்கள் வீட்டு குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, குலதெய்வத்தின் சாட்சியாக, ‘கெட்ட எண்ணம் பிடித்தவர்கலும், கெட்ட சக்தியையும், கண்திருஷ்டியையும் இந்த வீட்டிற்குள் நுழைய கூடாது’. என்று மனதார சொல்லி அந்த உப்பை, சிகப்பு துணியில் வைத்து, சிகப்பு நூலால் மூன்று முடிச்சுகள் போட்டு, உங்கள் வீட்டு நில வாசப்படியில், நடுப்பகுதியில் மாட்டிவிட வேண்டும்.

பார்ப்பதற்கு இது ஒரு சின்ன பரிகாரம் போல்தான் இருக்கும். ஆனால் இந்த முடிச்சை தாண்டி, உங்கள் வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியும் நுழைய முடியாது என்பது தான் உண்மை. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *