இப்பதான் ஒரு எலெக்ட்ரிக் காரை எறக்கனாங்க… அதுக்குள்ள இதுவா! டாடாவை இனி தடுத்து நிறுத்த வாய்ப்பே இல்ல!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது.

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாவில் டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV) எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து வரும் 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் டாடா அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த காரில் வழங்கப்பட்டுள்ள அதே பேட்டரி ஆப்ஷன்கள், டாடா அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி பார்த்தால், டாடா அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் காரில், 25kWh மற்றும் 35kWh என 2 பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதில், 25kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் ஆகவும், 35kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 421 கிலோ மீட்டர்கள் ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசதிகளை பொறுத்தவரையில், 10.25 இன்ச் அளவுடைய 2 திரைகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். இதுதவிர முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் கொடுக்கப்படலாம்.

மேலும் 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், சன்ரூஃப் போன்ற வசதிகளும், டாடா அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 12 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 17 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *