தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் தேடிவருமாம்… எந்த பாகத்தில் அணிய கூடாதுன்னு தெரியுமா?

பொதுவாகவே தண்ணீரை காதலிக்காத மீன்களும் தங்கத்தை காதலிக்காத பெண்களும் இருக்கவே முடியாது.

இதற்கு காரணம் தங்கம் விலை உயர்ந்த உலோகம் மற்றும் முதலீட்டில் முக்கிய இடம் வகிக்கின்றமையே அகும்.

தொன்று தொட்டு உலகில் உள்ள அனைத்து முக்கிய நாகரீகங்களும் சக்தி, அழகு, தூய்மை மற்றும் சாதனை ஆகியவற்றின் அடையாளமாக தங்கத்தை ஏன் பயன்படுத்தினார்கள் மற்றும் நமது சமூகத்தில் இந்தளவுக்கு முக்கிய இடத்தைப் தங்கம் பிடித்திருப்பது ஏன் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

தங்கம் இயற்கை கனிமமாகும், இது நச்சுத்தன்மையற்றது மற்றும் பிற மருந்துகளுடன் எந்த தொடர்புகளையும் வெளிப்படுத்தாது.

மருத்துவ மற்றும் குணப்படுத்தும் நோக்கங்களுக்காக தங்கம் பயன்படுத்தப்பட்டதற்கான ஆரம்ப பதிவுகள் எகிப்திய நாகரிகத்திலிருந்து வந்தவை. தங்கம் ஒரு அற்புதமான விஷயம்.

தங்கம் சூரியபகவானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதால் சமூகத்தில் மரியாதையை அதிகரிக்கும். எந்தெந்த தங்க நகைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன, அதை அணிவது சரியான வழி என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் மோதிர விரலில் தங்கம் அணிவது மரியாதையை விரும்புபவர்களின் மரியாதையை அதிகரிக்கும்.

தாழ்வு மனப்பான்மையால் அவதிப்படுபவர்கள், மனச்சோர்வு உள்ளவர்கள், மற்றவர்களை விட தங்களைத் தாழ்வாகக் கருதுபவர்கள் தங்க மோதிரத்தை ஆள்காட்டி விரலில் அதாவது முதல் விரலில் அணிய வேண்டும்.

அதனால் தன்னம்பிக்கை பெருகும், தலைமைப் பண்பும் அதிகரிக்கும். கழுத்தில் தங்கம் அணிவதால் இதயத்தை பலப்படுத்துகிறது. அறிவியல் படி, ஆற்றல் ஓட்டம் எப்போதும் விளிம்புகளில் இருந்து வருகிறது.

எனவே, தங்க நகைகளை தலையின் இருபுறமும், அதாவது மூக்கு மற்றும் காதுகளில் அணிய வேண்டும். அதனால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்களை நோக்கி நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்கப்படும்.

தலை மற்றும் கால்களில் தங்க நகைகளை அணிந்தால் நோய்வாய்ப்படுவீர்கள். இதிலிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றல் தலை மற்றும் கால் இரண்டையும் பாதிக்கும், இது உடலுக்குள் வெப்ப சக்தியை அதிகரிக்கும்.

ஆற்றல் சுழற்சியின் இடையூறு மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *