உங்க உடலில் இந்த மாதிரி துர்நாற்றம் வந்தால் டயபடீஸ் அறிகுறியாக இருக்கலாம்.. உஷாராக இருங்கள்..!
ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பு மற்றும் டயாபடீஸுக்கான அறிகுறிகளை கண்டறிவது சற்று கடினமான காரியம் தான். டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு ஒரு விதமான துர்நாற்றம் குறிப்பாக சுவாசிக்கும் பொழுது துர்நாற்றம் ஏற்படுவது ஒரு பொதுவான அறிகுறி.
இந்த அறிகுறிகளை கண்டறிந்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது சவாலான விஷயம். டயாபடீஸ் பிரச்சனையை கவனிக்காமல் விட்டு விடும் பொழுது அது ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளில் விட்டு விடலாம்.
துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
டயாபடீஸின் மிக மோசமான ஆபத்தான விளைவுகளில் ஒன்று டயாபெட்டிக் கீட்டோஅசிடோசிஸ். நமது உடலில் செல்களுக்குள் ரத்த சர்க்கரையை அனுமதித்து அது ஆற்றலாக பயன்படுத்துவதற்கு போதுமான இன்சுலின் இல்லாத போது டயாபடீஸ் காரணமாக ஏற்படும் சிக்கல்கள் எழுகிறது. இதனால் கல்லீரல் கொழுப்பை ஆற்றலாக பயன்படுத்தி அதனை கீட்டோன்கள் எனப்படும் அமிலமாக மாற்றுகிறது. இதனால் நமது ரத்தம் மற்றும் சிறுநீரில் ஆபத்தான அளவில் அதிக கீட்டோன்கள் காணப்படும்.
கல்லீரலுக்குள் நடக்கும் இந்த ரியாக்ஷன் காரணமாக நமது ரத்தம் அமிலத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இந்த உடல் நலக்குறைவால் ஏற்படக்கூடிய கெட்ட சுவாசம் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. இது நச்சுத்தன்மையை குறிக்கிறது. வியர்வை மற்றும் மூச்சு ஆகிய இரண்டும் கீட்டோன்களை நமது உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு போராடுகிறது. இதன் காரணமாகவே இந்த துர்நாற்றம் ஏற்படுகிறது.
நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய துர்நாற்றங்கள் :
மூச்சில் இருந்து பழ வாசனை போன்ற உணர்வு ஏற்படுவது
மலம் போன்ற துர்நாற்றம் வீசுவது
மூச்சு விடும் பொழுது அமோனியா வாசனை வருவது
மூச்சில் துர்நாற்றம் தவிர அதிகப்படியான சிறுநீர் கழித்தல், உடல் எடை குறைதல், வியர்வை, வாந்தி, அடிவயிற்றில் வலி, சோர்வு போன்றவையும் டயாபடீஸ் பிரச்சனைக்கான சில அறிகுறிகள். இந்த அறிகுறிகளைக் கொண்டு டயாபடீஸ் பிரச்சனையை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து, அதற்கான தகுந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கலாம். டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அடிக்கடி தங்களது ரத்த சர்க்கரையை கண்காணித்து அதனை சரியான அளவில் பராமரிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக கீட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
டயாபடிக் நோயாளிகள் பின்பற்ற வேண்டிய ஒரு சில உணவு விதிகள் நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் கலோரிகள், சர்க்கரை, உப்பு, ட்ரான்ஸ்ஃபேட் மற்றும் சாச்சுரேட்டட் ஃபேட் குறைவாக இருக்க வேண்டும். இதற்கு பதிலாக அதிக நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள், பாஸ்தா, பிரட் போன்றவற்றை சாப்பிடலாம். சோடா மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸுக்கு பதிலாக சாதாரண தண்ணீரை பயன்படுத்தவும். இந்த தண்ணீரில் ஃபிரஷான ஆரஞ்சு, எலுமிச்சை, வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை சேர்க்கலாம். உங்கள் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள். போதுமான அளவு உடற்பயிற்சி செய்வதும் அவசியம். உடற்பயிற்சி செய்து பழக்கம் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் பத்து நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.