பிரியாணி விற்கும் ஐஐடி பட்டதாரி.. சும்மா இல்லீங்க 220 கோடி ரூபாய்க்கு பிஸ்னஸ் நடக்குது..!!

ரியாணா மாநிலம் குருகிராம் தான் பிரியாணி பை கிலோ உணவுச் செயினின் தாயகம். 2015 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

அந்தப் பிராந்தியத்தில் பிரியாணி பை கிலோ பிரியாணி மிகவும் பிரபலமானது. ஐஐடி புவனேஷ்வரில் படித்த விஷால் ஜிண்டால் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். அவருக்கு சொந்த ஊர் ஆக்ரா. எலக்ட்ரானிக்ஸ் டிரேடிங்கில் நல்ல லாபத்தைப் பார்த்து வந்தபோதும் விஷால் ஜிண்டாலின் மனது வேறு மாதிரி யோசித்தது. லோக்கல் உணவை ஒரு தேசிய பிராண்டாக மாற்ற வேண்டும் என்பது தான் விஷாலின் விருப்பமாகும். ஆக்ராவில் இருந்த உணவு மார்க்கெட்டைப் பார்த்து அவரது எண்ணம் மேலும் வலுத்தது. 2015 ஆம் ஆண்டில் தனது நண்பர் கௌஷிக் ராயுடன் சேர்ந்து பிரியாணி தொழிலை ஆரம்பித்தார். இதற்காக அவரது நண்பர்களும்,

அனுபவமுள்ளவர்களும் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இதைப் பற்றியெல்லாம் விஷால் ஜிண்டால் கவலைப்படாமல் பிரியாணியை பான் இந்தியா அளவில் பிரபலப்படுத்தும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அவரது தந்தையின் பெரும் ஆதரவுடன் விஷால் தனது பிரியாணி பை கிலோ நிறுவனத்தை டெலிவரி சார்ந்ததாக உருவாக்கினார். அந்த நிறுவனம் இப்போது வகை வகையான தம் பிரியாணிகள், கபாப்கள், குருமா போன்ற உணவு ஐட்டங்களைத் தயாரித்து விற்கிறது. விஷால் நிறுவனத்தின்

பிரியாணியில் உயர்தரமான பாஸ்மதி அரிசியை பயன்படுத்துகின்றனர். இந்தியா முழுவதும் 45க்கும் மேற்பட்ட நகரங்களில் பிரியாணி பை கிலோ நிறுவனம் செயல்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே அந்த நிறுவனம் நிலையான வளர்ச்சியை அடைந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில் 18 கிளைகளில் இருந்து மாதம் ரூ.3 கோடி வருமானம் வந்தது. பிரியாணி இஸ் எமோஷன்.. தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் தான் இப்படியா..? இந்த நிலையில் தனது தொழிலை விரிவுபடுத்த நினைத்த ஜிண்டாலுக்கு IvyCap என்ற நிறுவனத்தின் மூலம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடாகக் கிடைத்தது. கொரோனா கால

நிறுவனத்தின் மூலம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடாகக் கிடைத்தது. கொரோனா கால முடக்கத்தின்போது பலரது பசியை பிரியாணி பை கிலோ நிறுவனம் தனது டெலிவரிகளின் மூலம் ஆற்றியது. 2023 நிதியாண்டில் பிரியாணி பை கிலோ நிறுவனத்தின் வருமானம் ரூ.221.75 கோடி என்று போர்ப்ஸ் இந்தியா கணக்கிட்டுள்ளது. 2024 நிதியாண்டில் தனது நிறுவனத்தை ரூ.1000 கோடி லாபத்தை எட்டும் என்று விஷால் ஜிண்டால் நம்புகிறார். இந்தியாவைத் தொடர்ந்து வெளிநாடுகளிலும் தனது

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *