Ilaiyaraaja Daughter Bhavatharini : பாடகி பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி!
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
பின்னணி பாடகி பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 47. கேன்சர் பாதிப்பால் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.
ராமன் அப்துல்லா புதிய கீதை உள்ளிட்ட படங்களில் பவதாரிணி பாடல்களை பாடியுள்ளார். பாரதி படத்தில் அவர் பாடிய ஒரு பாடலுக்காக தேசிய விருது வாங்கினார்.
பின்னணி பாடுகையாக மட்டும் அல்லாது பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பவதாரிணி இசையமைத்துள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.