நான் ஒரு இந்தியன்.. எனக்கு உங்க மனைவியை ரொம்ப பிடிச்சிருக்கு.. பாட் கம்மின்ஸ் சொன்ன நச் பதில்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த காலகட்டத்தில் இருந்து வருகிறார். ஆஸ்திரேலிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் முதன்முறையாக நியமிக்கப்பட்ட போது பலரும் ஒரு வேகப்பந்துவீச்சாளரையா கேப்டனாக நியமிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர்.

ஆனால் பாட் கம்மின்ஸ், தன்னுடைய கடின உழைப்பு மற்றும் தியாகத்தால் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பாட் கம்மின்ஸ், 2023 ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பையையும் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். அடுத்த மூன்று மாதத்திற்கு பாட் கம்மின்ஸ்க்கு பல கிரிக்கெட் போட்டிகள் இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர், ஐபிஎல் மற்றும் ஐசிசி t20 உலக கோப்பை தொடர் என தொடர்ந்து மூன்று மாதங்கள் பாட் கம்மின்ஸ் விளையாட உள்ளார்.

இந்த நிலையில் பாட் கம்மின்ஸ் இந்த தொடருக்கு தயாராகும் வகையில் ஓய்வில் இருக்கிறார். தற்போது உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தன்னுடைய மனைவி பெக்கி பாஸ்டன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பாட் கம்மின்ஸ், என்னுடைய மனைவி, காதலி, என் குழந்தைகளுக்கு சூப்பர் அம்மா மற்றும் அலைச்சறுக்கு விளையாட்டில் சிறப்பாக செயல்படும் என் காதலி ஆகிய அனைத்துக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் என்று பாட் கம்மின்ஸ் கூறியிருந்தார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. அப்போது ரசிகர் ஒருவர் அந்தப் புகைப்படத்திற்கு கீழே சென்று நான் ஒரு இந்தியன். உங்கள் மனைவியை நான் காதலிக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த கருத்து மற்ற ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஆனால் இதனைக் கூலாக கையாண்ட கம்மின்ஸ், நீங்கள் காதலிப்பதாக என் மனைவியிடம் நான் கூறி விடுகிறேன் என்று நகைச்சுவையாக பதில் அளித்து ரசிகர்களின் மனதை வென்று இருக்கிறார்.

எனினும் அந்த ரசிகரின் இந்த கருத்து தவறு என்றும் இவ்வாறு செயல்படுவதால் இந்தியாவின் மானமே போய் விடுகிறது என்றும் மற்ற நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் இதையெல்லாம் தன்னுடைய கமெண்ட் மூலம் பார்க்காமல் அனைவரின் மனதையும் வென்று விட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *