இன்னும் 2 தினங்களில் நான் சாக போகிறேன் : நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள விடியோவால் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை காதல் திருமணம் செய்துகொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இதனிடையே, கடந்த ஆண்டு பெங்களூரில் இருந்து வந்த விஜயலட்சுமி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளித்தார். ஆனால் சில வாரங்களுக்கு பிறகு, தான் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாகவும், இனி தமிழ்நாட்டுக்கு திரும்பவே மாட்டேன் எனவும் ஆவேசமாக கூறி சென்றார். இந்த விவகாரத்தில் சீமானிடம் இருந்து விஜயலட்சுமி பணம் பெற்றுவிட்டதாக சிலர் விமர்சித்து வந்தனர்.

இந்த சூழலில், கடந்த வாரம் ஒரு கட்டிடத்தின் உச்சியில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டார் விஜயலட்சுமி. அதில், “சீமான் மாமா நான் உயரமான கட்டிடத்தின் உச்சியில் நிற்கிறேன். பெங்களூரில் நான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். நான் உங்கக்கிட்ட சண்டை போட்டாலும் உங்க மேல அன்பு இருக்கு. என்ட்ட பேசுங்க சீமான் மாமா. தமிழ்நாடு மீடியாக்களே என் கணவர் சீமானை என்னோடு சேர்த்து வெச்சிடுங்க” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜயலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிப்ரவரி 29-ம் தேதி நான் ஒரு வீடியோவை போட்டேன். சீமானை என்னிடம் பேச சொல்லுங்கனு ஒரு கோரிக்கை வெச்சிருந்தேன். இன்னைக்கு மார்ச் 5-ம் தேதி ஆயிருச்சு. ஒரு பொண்ணு மொட்டை மாடிக்கு போய் இப்படி வீடியோ போடுறா என்றால் அவளுக்கு எந்த அளவுக்கு மன அழுத்தம் ஆயிருக்கும்னு எல்லோருக்கும் தெரியும். ஆனால், அப்படி வீடியோ போட்டும் கூட, ஒருத்தர் கண்டுக்கல.

இப்போ நான் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விஷயத்தை சொல்றேன். இதுதான் என் கடைசி வீடியோ. ரெண்டு நாள் கழிச்சு, நான் எப்படி செத்தேன் என்று கர்நாடகா உங்களுக்கு தெரியப்படுத்துவாங்க. அப்புறம் சீமானுக்கு கர்நாடகாவில் இருந்து அழைப்பு வரும். ஓகே.. இதுதான் என் கடைசி வீடியோ. என்னோட மரணம் சீமான் யாருனு உங்களுக்கு தெரியப்படுத்தும். அதுக்கு அப்புறம் சீமான் தமிழ்நாட்டுக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. உங்க அன்புக்கு நன்றி தெரிவிச்சிக்குறேன். வணக்கம். இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *