ஆபிஸ் வர மூட் இல்லை.. அதுக்கும் லீவ் இருக்கு.. இப்படியும் விடுமுறை அளிக்கும் நாடு எது தெரியுமா?

மன நிலை சரியில்லாவிட்டால் பணியாளர்களுக்கு விடுப்பு வழங்கும் நடைமுறையில் ஒரு நாட்டில் உள்ளது. இதற்கு பணியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. வளர்ந்த நாடுகள் சிலவற்றில் இந்த விடுப்பு நடைமுறையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல் நலக்குறைவு, வீட்டில் சுக துக்கங்கள் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி அலுவலகத்திற்கு விடுமுறை எடுப்பது வழக்கமாக உள்ளது. அரசு மற்றும் சில தனியார் அலுவலகங்களில் பிரசவ கால விடுப்புகளை வழங்குகின்றனர். சில அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் கடுமையானவராக இருந்தால் அங்கு விடுமுறை எடுப்பது என்பது பணியாளர்களுக்கு சிரமமான காரியமாக உள்ளது.

பணியாளர்களின் நிலைமையை புரிந்து கொண்டு அவர்களுக்கு விடுப்பு வழங்கும் அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் இருப்பார்கள் என்று கூற முடியாது. இந்நிலையில் மனநிலை சரியாக இல்லாவிட்டால் விடுமுறை வழங்கும் செயல்முறை சீனாவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முறையில் விடுப்பு எடுப்பதற்கு மூட் லீவ் (Mood Leave) என்று சொல்கிறார்கள். சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹோங்சு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மூட் லீவ் குறித்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அவர் தனது உயர் அதிகாரிக்கு அனுப்பிய விடுப்பு கடிதத்தில் தனது நகரில் பனிப்பொழிவு இல்லை. இதனால் தனக்கு அழுவது போல் தோன்றுவதாகவும், தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும் கூறியுள்ளார். இதிலிருந்து மீண்டு வருவதற்கு தனக்கு மூட் லீவ் தர வேண்டும் என்று கேட்க, அதற்கு உயர் அதிகாரி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்காக பணியாளரின் சம்பளத்திலிருந்து எந்த தொகையும் பிடித்தம் செய்யப்படாது என்று உயர் அதிகாரி கூறியுள்ளார்.

அந்த வகையில் தற்போது மூட் லீவ் Mood Leave என்ற சொல் சமூக வலை தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இதனை மனநிலை விடுமுறை என்று தமிழில் அழைக்கிறார்கள். இதுபோன்ற விடுமுறைகள் தங்கள் அலுவலகங்களிலும் கிடைக்குமா என்று நெட்டிசன்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *